புதுடெல்லி: இந்திய மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. செபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் தொகை அதிகபட்ச அளவு அதிகரித்துள்ளது. இந்திய மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மார்ச் 2022 இறுதியில் 'திரும்ப வசூலிக்க முடியாத கடன்' பிரிவில் ரூ.67,228 கோடி நிலுவைத் தொகை இருப்பு இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 96,609 கோடி ரூபாய் கடன் தொகை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று செபியின் 2021-22 ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது
பல நிறுவனங்கள் இதுவரை அபராதம் செலுத்தவில்லை
இதில் பல நிறுவனங்கள் அபராதத் தொகையைக் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றன. அதே சமயம், இதுவரை கட்டணம் கூட செலுத்தாமல், முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருமாறு செபியின் அறிவுறுத்தல்களைக் கூட பின்பற்றாதவர்கள் பலர் உள்ளனர்.
ரூ.96,609 கோடியில், 65 சதவீதம் அதாவது ரூ.63,206 கோடி கூட்டு முதலீட்டுத் திட்டம் (சிஐஎஸ்) மற்றும் பிஏசிஎல் லிமிடெட் மற்றும் சஹாரா குழும நிறுவனமான சஹாரா இந்தியா கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் பொதுப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்று செபி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சென்னை ரெப்கோ வங்கி வேலை வாய்ப்பு - முழு விவரம்
செபி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அதே சமயம், மொத்தத் தொகையில் 70 சதவீதம் அதாவது ரூ.68,109 கோடி மதிப்புள்ள தொகைகள் தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களின் முன் உள்ளன. 67,228 கோடி நிலுவைத் தொகையை வசூலிப்பது கடினம் என்று செபி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க அனைத்து முறைகளையும் பின்பற்றிய பின்னரும் தொகை திரும்பப் பெறப்படாதபோது மட்டுமே அது வாரக்கடன் என்ற பிரிவில் சேர்க்கப்படும். இது தவிர, 2021-22 ஆம் ஆண்டில் விசாரணையின் போது பத்திர விதிகளை மீறியது தொடர்பான 59 வழக்குகளை செபி எடுத்துள்ளது.
அவை, முந்தைய ஆண்டின் 94 வழக்குகளுடன் ஒப்பிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில், இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 140 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாதந்தோறும் ஓய்வூதியம்! அசத்தும் போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்!
மேலும் படிக்க | கடன் செயலிகள் - நடவடிக்கை எடுக்க மத்திய அரசு கடிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ