SBI மூலம் நிமிடங்களில் 50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம்: இதை செய்தால் போதும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதன் பல்வேறு வகையான திட்டங்களுக்கு மலிவு வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2021, 11:10 AM IST
  • SBI தங்கக் கடனை அருமையான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
  • இதற்கு அதிகமான காகித பணிகளும் தேவயில்லை.
  • தங்க மதிப்பீட்டாளர் கட்டணங்கள் விண்ணப்பதாரரால் செலுத்தப்படும்.
SBI மூலம் நிமிடங்களில் 50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம்: இதை செய்தால் போதும் title=

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தங்கக் கடனை அருமையான வட்டி விகிதத்திலும், அதிக ஆவண தேவைகள் இல்லாமலும் வழங்கி வருகிறது.

SBI மூலம் தங்கக் கடனைப் பெற எண்ணும் வாடிக்கையாளர்கள் 7208933143 என்ற தொலைபேசி எண்ணில் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும். அல்லது ‘GOLD’என எழுதி 7208933145 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதன் பின்னர் வங்கியிலிருந்து இது குறித்த விவரங்களை வழங்க உங்களுக்கு அழைப்பு வரும்.

"வர்த்தகம் செய்ய நல்ல முதலீட்டைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தால் நீங்கள் SBI-ஐ நாடலாம். SBI-யில் தங்கக் கடனுக்கு விண்ணப்பித்து, 7.50% வட்டி விகிதம், பூஜ்ஜிய பிராசசிங் கட்டணம் மற்றும் இன்னும் பல அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். நாங்கள் உங்களை அழைக்க 7208933143 என்ற தொலைபேசி எண்ணில் ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள், அல்லது, ‘GOLD’என எழுதி 7208933145 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்புங்கள்” என்று SBI ட்வீட் செய்துள்ளது.

ALSO READ: SBI அளிக்கும் அதிரடி offer: வங்கிக்கு செல்லாமலேயே 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்

குறைந்தபட்ச காகித வேலை மற்றும் குறைந்த வட்டி விகிதத்துடன் வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களின் உத்தரவாதத்துடன் SBI தங்கக் கடனைப் பெற முடியும். SBI தங்கக் கடனுக்கு பின்வரும் முக்கியமான விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை:

அதிகபட்ச கடன் தொகை: ரூ .50 லட்சம்

குறைந்தபட்ச கடன் தொகை: ரூ .20,000

செயலாக்க கட்டணம்: கடன் தொகையில் 0.25% + பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி (GST) குறைந்தபட்சம் 250 ரூபாய் + பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி மற்றும் யோனோ மூலம் விண்ணப்பித்தால் கட்டணம் இல்லை. தங்க மதிப்பீட்டாளர் கட்டணங்கள் விண்ணப்பதாரரால் செலுத்தப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதன் பல்வேறு வகையான திட்டங்களுக்கு மலிவு வட்டி விகிதத்தில் கடனை வழங்குகிறது. திருமணத்திற்கான கடன், தனிப்பட்ட கடன், வணிக கடன், தங்கக் கடன், கார் கடன் என அனைத்து வகையான கடன்களிலும் பலவித சலுகைகளை SBI வழங்கி வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது.

SBI தன்னுடைய பல்வேறு கடன் வகைகளில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பல்வேறு ட்வீட்களில், கார் கடன், தங்கக் கடன், தனிநபர் கடன், வணிகக் கடன் ஆகியவற்றின் புதிய வட்டி விகிதத்தை பற்றி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.

ALSO READ: SBI Cheap Loans: பல்வேறு கடன் வகைகளில் SBI அளிக்கும் அதிரடியான சலுகைகள் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News