பணியாளர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்க வலுக்கும் கோரிக்கை: நிதர்சனம் என்ன

ஊழியர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்காவிட்டால் போராட்டம் தொடரும் எச்சரிக்கும் தொழிற்சங்கம்: நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக் கொள்ளமுடியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2022, 04:25 PM IST
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயரலாம்
  • அதிகபட்ச இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு வரம்பு
  • இபிஎஸ் வரம்பு நீக்கப்படுமா
பணியாளர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்க வலுக்கும் கோரிக்கை: நிதர்சனம் என்ன title=

Employee Pension Scheme: பணியாளரின் ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இதில் ஒரு வரம்பு இருப்பதால், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மிக அதிகமாக இல்லை. எனவே இந்த வரம்பை நீக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) உச்சவரம்பை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில், தொழிலாளர் அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திற்கு வெளியேயும் தீர்வுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டலாம் என்று சங்கம் கூறுகிறது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு EPFO-ன் அதிரடி அறிவிப்பு!

தற்போதுள்ள கட்டமைப்பில், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு 15000 ரூபாய் என்று உள்ளது. இந்த உச்சவரம்பு காரணமாக, பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பெறுவோர் மிகக் குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.

இது தொடர்பான குறிப்பு தொழிலாளர் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளதாக தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், போராட்டம் நடத்துவது குறித்து எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஊழியர் ஓய்வூதியத் திட்டம்: இப்போது விதி என்ன?

ஒரு ஊழியர் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) உறுப்பினராகும்போது, ​​அவரும் EPS இல் உறுப்பினராகிறார். ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிப்பு PFக்கு செல்கிறது. பணியாளரின் பங்க்கு இணையான தொகையை, முதலாளியும் கொடுக்கிறார்.

ஆனால், முதலாளியின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஸ் அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. EPS இல் அடிப்படை சம்பளத்தின் பங்களிப்பு 8.33% ஆகும். இருப்பினும், ஓய்வூதிய ஊதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000 ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய நிதியில் அதிகபட்சமாக ரூ.1250 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

மேலும் படிக்க | Home Loan-ஐ விரைவில் அடைக்க: ஃபிக்ஸ்ட் வட்டி விகிதம், ஃப்ளோடிங்க் விகிதம்? எது சிறந்தது?

பணியாளர் ஓய்வூதியத் திட்டம்: உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம்

தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், ஓய்வூதிய நிதியில் ரூ.1250 டெபாசிட் செய்யப்படும். அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் என்றால் பங்களிப்பு தொகை 833 ரூபாய் மட்டுமே.

பணியாளரின் ஓய்வூதியத்தின் மீதான ஓய்வூதிய கணக்கீடு அதிகபட்ச சம்பளமாக 15 ஆயிரம் ரூபாயாக மட்டுமே கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வு பெற்ற பிறகு, இபிஎஸ் விதியின் கீழ், ஊழியர்கள் 7,500 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெற முடியும்.

15,000 என்ற வரம்பு நீக்கப்பட்டால் என்ன ஆகும்?
ஓய்வூதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரம்பு நீக்கப்பட்டால், 7,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறலாம். ஆனால், இதற்கு இபிஎஸ் நிதியத்திற்கான முதலாளியின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும்.

ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இபிஎஸ் கணக்கீட்டிற்கான சூத்திரம் = மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x இபிஎஸ் கணக்கில் வருடங்களின் பங்களிப்பு)/70.

ஒருவரின் மாதச் சம்பளம் (கடந்த 5 ஆண்டுகளின் சராசரி சம்பளம்) ரூ.15,000 ஆகவும், பணியின் காலம் 30 ஆண்டுகளாகவும் இருந்தால், அவருக்கு மாதம் ரூ.6,828 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும்.

வரம்பு நீக்கப்பட்டால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
15 ஆயிரம் என்ற வரம்பு நீக்கப்பட்டு, அடிப்படைச் சம்பளம் 20 ஆயிரமாக இருந்தால், பார்முலாவின்படி உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் இப்படித்தான் இருக்கும். (20,000 X 30)/70 = ரூ 8,571

மேலும் படிக்க | அசத்தில் திட்டம்; வெறும் 2 ரூபாயில் ரூ.36000 பென்ஷன்

ஓய்வூதியத்திற்கான தற்போதைய நிபந்தனைகள் (EPS)

EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 10 வருடங்கள் நிலையான பணியில் இருக்க வேண்டும்.
58 வயதை எட்டினால் ஓய்வூதியம் கிடைக்கும். 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெறும் தெரிவும் உண்டு.
முதல் ஓய்வூதியம் பெறும்போது, ​​குறைக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு படிவம் 10டி பூர்த்தி செய்ய வேண்டும்.
ஊழியர் இறந்தால், குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான விருப்பம் கிடைக்கும்.

மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

மே

Trending News