RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி?

RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கையை அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2023, 10:42 AM IST
  • ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.
  • EMI இல் எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?
RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி? title=

RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கையை அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று தனது உரையில் அறிவித்துள்ளார். இதனால், பல வித கடன்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் EMI யில் எந்த நிவாரணமும் இருக்காது. வட்டி விகிதங்களில் அடிகரிப்பு இருக்காது என்பதும் ஒரு நல்ல செய்தி. 

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of Inida) நிதிக் கொள்கைக் குழு வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% என்ற அளவிலேயே வைத்திருக்க ஏகமனதாக முடிவு செய்தது. மத்திய வங்கி FY24 க்கான ஜிடிபி வளர்ச்சி (GDP Growth) கணிப்புகளை 6.5% க்கு பதிலாக 7% ஆக மாற்றியது.

வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு, அதன் இலக்கு வரம்பிற்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி கடன் வாங்குபவர்களுக்கு EMI ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளது. இது ரியல் எஸ்டேட் துறைக்கு லாபகரமான முன்மொழிவாக பார்க்கப்படுகின்றது. 

EMI இல் எந்த பாதிப்பும் ஏற்படாது

ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதாவது, ரெப்போ விகிதம் பழைய நிலையிலேயே உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லாததால், கடன் வாங்கியுள்ளவர்களின் EMI பழைய நிலையிலேயே இருக்கும். இருப்பினும், வரும் காலங்களில், நிலையான வைப்பான எஃப்டி -இன் வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம். ரெப்போ விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடதத்க்கது. கடந்த ஆண்டு, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை அதிகரிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி துவக்கியது. இதற்குப் பிறகு பணவீக்க விகிதத்தில் சரிவு காணப்பட்டது.

மேலும் படிக்க | SCSS பம்பர் திட்டம்: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் வருமானம், அசத்தல் வட்டி.. இன்னும் பல நன்மைகள்

யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?

ரெப்போ விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் இல்லாததால் வங்கியில் கடன் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் எந்த வகையான கடனுக்கான வட்டி விகிதத்தையும் அதிகரிக்காது. ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால், அது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் கடன்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதன் விளைவாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களின் விகிதமும் உயர்த்தப்படும். இதன் தாக்கம் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் தெரியும். இது கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் இஎம்ஐ மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | NPS பங்களிப்பை செலுத்த மறந்தால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News