கிரெடிட் கார்ட், தனிநபர் கடன் வாங்கியவர்கள் உஷார்: விதிகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி

RBI Update: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்ட் போன்ற கடன்கள் தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 10:25 AM IST
  • கடன் விதிகளை கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி.
  • வங்கி அல்லாத துறைகளில் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நிதி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
கிரெடிட் கார்ட், தனிநபர் கடன் வாங்கியவர்கள் உஷார்: விதிகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி title=

RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் நுகர்வோர் கடன் விதிகளை கடுமையாக்கியுள்ளது. பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தனிநபர் கடன்களுக்கான ஆபத்து அளவுகோலை அதிகரித்து வாடிக்கையாளர் கடன் விதிமுறைகளை கடுமையாக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு, வங்கிகளின் மூலதன நிறைவு அளவை 0.6 சதவீதம் குறைக்கும். கடன் மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்ட் போன்ற கடன்கள் தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. திருத்தப்பட்ட அளவுகோலில் ஆபத்து அளவுகோல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கி அல்லாத துறைகளில் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) இந்த நடவடிக்கையால், வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தான வங்கிக் கடன்கள் வழங்கப்படுவது குறையும். மேலும், குறிப்பாக வங்கி அல்லாத துறைகளில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கும், கடன் வளர்ச்சியை குறைக்கும் மற்றும் பலவீனமான நிதி நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்ட வேண்டிய தேவையை அதிகரிக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. மறுபுறம், அதிக ஆபத்து அளவுகோலில் இறுதியில் இது சிறந்த சொத்து தரத்திற்கு வழிவகுக்கும்.

தாக்கம் சாத்தியம்

எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்கின் கடன் பகுப்பாய்வாளர் கீதா சுக், "மெதுவான கடன் வளர்ச்சி மற்றும் இடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இந்திய வங்கி அமைப்பில் சொத்து தரத்தை மேம்படுத்தும்" என்று கூறினார். "இருப்பினும், அதன் உடனடி தாக்கம் கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள், நிதி நிறுவனங்களுக்கான மெதுவான கடன் வளர்ச்சி, மூலதன அளவு குறைப்பு மற்றும் லாபத்தில் சில தாக்கங்கள் ஆகியவற்றில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். "வங்கிகளின் பங்கு மூலதனம் (டரய்-1) போதுமான அளவு 0.6 சதவிகிதம் குறையும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்." என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: காத்திருக்கும் 2 பரிசுகள், அதிகரிக்கும் மாத ஊதியம்

நிதி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்

இது குறித்து மேலும் கூறிய கீதா சுக், "நிதி நிறுவனங்கள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்படும். ஏனென்றால் நிதி நிறுவனங்களின் வங்கிக் கடன்கள் அதிகரிப்பதால் அவற்றின் செலவு அதிகரிக்கும். அத்துடன் மூலதன நிறைவு அளவும் பாதிக்கப்படும்." என்று தெரிவித்தார். இந்த மாற்றங்களால் இந்தியாவின் செயல்திறன் நிதித் துறையின் நம்பகத்தன்மையில் உடனடி பாதிப்பு இருக்காது என்றும் மதிப்பீட்டு நிறுவனம் கூறியது. இது மதிப்பிடப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இடர்-சரிசெய்யப்பட்ட மூலதன விகிதத்தையும் பாதிக்காது என்று கூறப்படுகின்றது.

இந்திய ரிசர்வ் வங்கி நுகர்வோர் கடன் விதிகளை கடுமையாக்கியதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ கார்ட்ஸ் வெள்ளிக்கிழமை பெரிய தகவல்களை அளித்துள்ளது. தங்களின் மூலதன நிறைவு அளவு (capital adequacy ratio) விகிதத்தில் 4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கயின் காரணமாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) அத்தகைய கடன்களை வழங்குவதில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு தெரியும். 

மேலும் படிக்க | EPF முக்கிய அப்டேட்: ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க வேண்டுமா? அதற்கு இவை எல்லாம் அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News