RBI Repo Rate: ரிசர்வ் வங்கி கொடுக்கவுள்ள குட் நியூஸ்.. கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய பரிசு

RBI Repo Rate: ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றாமல் ஏற்கனவே உள்ள விகிதங்களிலேயே தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 2, 2023, 09:56 AM IST
  • நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) மூன்று நாள் கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது.
  • அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்புகள் வெளியாகும்.
  • ரிசர்வ் வங்கியின் தாராளமய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RBI Repo Rate: ரிசர்வ் வங்கி கொடுக்கவுள்ள குட் நியூஸ்.. கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய பரிசு title=

RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த வாரத்தில் நடக்கவுள்ள தன் நிதிக் கொள்கைக் குழு மதிப்பாய்வு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளுக்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றாமல் ஏற்கனவே உள்ள விகிதங்களிலேயே தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பொருள் தனிநபர் மற்றும் பெருநிறுவன கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்கும். 

Repo Rate: மே 2022 முதல் ரெப்போ விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கின

ரஷ்யா-உக்ரைன் போரைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி (Reserve Bank) மே 2022 இல் கொள்கை விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அது 6.5 சதவீதத்தை எட்டியது. அதன் பின்னர், கடந்த மூன்று தொடர்ச்சியான இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டங்களில் கொள்கை விகிதம் மாற்றப்படாமல் நிலையானதாக வைக்கப்பட்டது.

அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்புகள் வெளியாகும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) மூன்று நாள் கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) வெளியிடப்படும். 

BoB இன் பொருளாதார நிபுணர் இதனை தெரிவித்துள்ளார்

பாங்க் ஆப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், இம்முறை பணவியல் கொள்கை தற்போதுள்ள விகிதக் கட்டமைப்பு மற்றும் கொள்கை நிலைப்பாட்டில் தொடர வாய்ப்புள்ளது. எனவே ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று கூறியுள்ளார். "சில்லறை பணவீக்கம் இன்னும் 6.8 சதவீதமாக உள்ளது என்றும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் காரீஃப் உற்பத்தியில் சில அச்சங்கள் உள்ளன, இது விலையை அதிகரிக்கக்கூடும்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இக்ரா லிமிடெட் மூத்த துணைத் தலைவர் மற்றும் குழுத் தலைவர் (நிதித் துறை மதிப்பீடு) கார்த்திக் சீனிவாசன், MPC கொள்கை விகிதத்தை நிலையானதாக வைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
மேலும் படிக்க | ரூ16,000 கோடி மதிப்பிலான குடியிருப்புத் திட்டங்கள் ரெடி! டாடா ஹவுசிங் முயற்சி

இன்னும் பல வங்கித்துறை மற்றும் நிதித்துறை மூத்த அதிகாரிகளும் ரிசர்வ் வங்கி  MPC விகிதங்களை முன்னர் இருந்த விகிதங்களிலேயே வைத்திருக்கும் என தெரிவித்துள்ளனர். செப்டம்பர் இரண்டாம் பாதியில் காணப்பட்ட பணப்புழக்கம் பற்றாக்குறை தொடர வாய்ப்பில்லை என கருதும் நிபுணர்கள் குறிப்பாக, சமீபத்திய கொள்கை மதிப்பாய்வில் அறிமுகப்படுத்தப்பட்ட கூடுதல் CRR பணப்புழக்கத்தைத் ஏதுவாகக் உதவும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் தாராளமய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

"ரிசர்வ் வங்கியின் இணக்கமான நிலைப்பாடு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி (RBI) நீண்ட காலமாக முக்கிய வட்டி விகிதங்களை நிலையானதாக வைத்துள்ளது, இது அனைத்து துறைகளுக்கும் பலனளித்துள்ளது." என நரெட்கோ தேசிய தலைவர் ராஜன் பந்தேல்கர் கூறியுள்ளார்.

"பொதுத்துறையின் வலுவான தேவை காரணமாக, வட்டி விகிதங்களை (Interest Rates) குறைவாக வைத்திருப்பது முக்கியம். இந்த அணுகுமுறை சாத்தியமான நுகர்வோரை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய கடன்களை பெற ஊக்குவிக்கும். இதன் மூலம் ரியல் எஸ்டேட் சந்தையில் ஒட்டுமொத்த செயல்பாடு அதிகரிக்கும். டெவலப்பர்கள் மற்றும் சொத்து வாங்குபவர்கள் இருவருக்கும் கடன் மற்றும் நிதி விருப்பங்களை வழங்குவது வங்கிகளுக்கு முக்கியம் என்பதால், வங்கி அமைப்பில் போதுமான பணப்புழக்கத்தை ஆர்பிஐ உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி தனது தொழில்துறை நட்பு நிலைப்பாட்டை தொடரும் என்பதும் ரெப்போ விகிதத்தில் தற்போதைய நிலையைத் தொடரும் என்பதுமே பல பொருளாதார மற்றும் சந்தை நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க | தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்குகிறது! XXVII கட்டத்தில் முதலீடு செய்யத் தயாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News