Silver Import Through IIBX: தீபாவளியை முன்னிட்டு நகை வியாபாரிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரிய பரிசை வழங்கியுள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்வது போல் தங்க நகை வியாபாரிகள் இப்போது வெள்ளியை பொன் பரிமாற்றம் மூலம் இறக்குமதி செய்யலாம். இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன் வாயிலாக தகுதியுள்ள நகை வியாபரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வது போல் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் ஐஎஃப்எஸ்சி லிமிடெட் (IIBX) மூலம் வெள்ளியையும் இறக்குமதி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வழங்கியது
வெள்ளியை (Silver) இறக்குமதி செய்யும் நகை வியாபாரிகள் அதற்கு 11 நாட்களுக்கான முன்பணம் செலுத்த அனுமதிக்குமாறு இறக்குமதியை கையாளும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, ரிசர்வ் வங்கியின் உத்தரவில், “சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தால் (IFSCA) அறிவிக்கப்பட்ட தகுதியான நகைக்கடைகள், குறிப்பிட்ட ITC (HS) குறியீடுகளின் கீழ் IIBX மூலம் வெள்ளியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தகுதியுள்ள நகைக்கடைக்காரர்கள் IIBX மூலம் வெள்ளி இறக்குமதிக்கு 11 நாட்களுக்கான அட்வான்ஸ் பேமெண்ட் (Advance Payment) செய்ய அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மே 25, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. முன்னதாக வெள்ளி இறக்குமதிக்கு பெரும் தடை விதிக்கப்பட்டது. இவற்றைக் கையாள பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஏஜென்சிகளுக்கு டிஜிஎஃப்டியால் பரிந்துரைக்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையங்கள் சில நிபந்தனைகளின் கீழ் வெள்ளி வடத்தை இறக்குமதி செய்யலாம்.
வெள்ளி வர்த்தகம் ஏற்றம் பெறும்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இந்த முக்கிய முடிவு வெள்ளி வர்த்தகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. மேலும் இதன் மூலம் நகை வியாபாரிகளுக்கு தங்களுக்கு தேவையான வெள்ளியை இறக்குமதி செய்ய இன்னும் பல வழிகள் கிடைக்கும். இதன் மூலம் நகை வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும்.
கூடுதல் தகவல்
இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வங்கியில் பணம் போடும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவைகளை மேம்படுத்த பல புதிய விதிகளையும் இயற்றி வருகிறது. இதுமட்டுமின்றி, வங்கிகளை தொடர்ந்து கண்காணித்து விதிமீறல் செய்யும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிபில் ஸ்கோர் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் பல விதிகள் இடம்பெற்றுள்ளன. கடன் மதிப்பெண்கள், அதாவது கிரெடிட் ஸ்கோர் குறித்து பல புகார்கள் வந்ததால் மத்திய வங்கி விதிகளை கடுமையாக்கியுள்ளது. மேலும், புகார்களின் எண்ணிக்கை மற்றும் தரவை மேம்படுத்தாததற்கான காரணத்தையும் கிரெடிட் பீரோ இணையதளத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் பல விதிகளை வகுத்துள்ளது. புதிய விதிகள் 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும். ஏப்ரல் மாதமே இதுபோன்ற விதிகளை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரை (CIBIL Score) வங்கிகள் சரிபார்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ