நம்பகமான முதலீடு திட்டத்தை தேடும் மக்கள் அனைவருக்கும் முதல் சாய்ஸாக இருப்பது போஸ் ஆஃபீஸ் தான். இதில் பல சிறு சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. தொடர் வைப்புத் தொகை(Recurring Deposit) திட்டமும் இருக்கிறது. தொடர் வைப்பு தொகை திட்டத்தில் மாதத்திற்கு வெறும் 100 ரூபாய் முதலீட்டில் கூட உங்கள் சேமிப்பு கணக்கைத் திறக்கலாம்.
ஏன் சேமிப்பு அவசியம்?
வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சேமிப்பு அவசியம். அதற்கு சரியான திட்டத்திலும் முதலீடு செய்வது மற்றொரு முக்கியமான அம்சம். அந்தவகையில், ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் சேமித்து, தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதில் முதன்மையாக இருப்பது போஸ்ட் ஆஃபீஸ். இந்த போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டம் ஒன்றில் நீங்கள் நாள் ஒன்றுக்கு 333 ரூபாய் முதலீடு செய்து வந்தால், திட்டத்தின் முடிவில் நீங்கள் 17 லட்சம் ரூபாயை பெறுவீர்கள். ஏழையும் லட்சாதிபதியாக்கும் சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. அந்த திட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வங்கிகள் கொடுக்கும் அதிகபட்ட வட்டி! இது நிலையான வைப்பு எஃப்.டி விகிதங்கள்!
100 ரூபாயில் கணக்கு தொடங்கலாம்
இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்கில், அதாவது தபால் அலுவலகத்தின் சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஆர்டியில், மாதம் ரூ.100 முதலீடு செய்து உங்கள் கணக்கைத் திறக்கலாம். இதில், தனியாக அல்லது கூட்டு கணக்கு தொடங்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வட்டியைப் பொறுத்தவரையில் தற்போது இந்த திட்டத்தில் 6.7 சதவிகிதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதம் ஜனவரி 1, 2024 முதல் பொருந்தும்.
RD இல் முதலீடு செய்வது ஆபத்து இல்லை
தபால் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு திட்டங்களும் ஆபத்து இல்லாதவை. அதைப்போலவே RD முதலீட்டிலும் முற்றிலும் ஆபத்து இல்லை. இதில், முதலீட்டுக்கான பாதுகாப்பை அரசாங்கமே உறுதி செய்கிறது. ஆனால் இந்த சிறுசேமிப்பு RD திட்டத்தில் பெரிய நன்மைகளுடன், நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் முதலீடு செய்ய நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் நீங்கள் எந்த மாதத்திலும் தவணை செலுத்த மறந்துவிட்டால், நீங்கள் மாதத்திற்கு 1% அபராதம் செலுத்த வேண்டும். உங்கள் 4 தொடர்ச்சியான தவணைகள் செலுத்தப்படவில்லை என்றால் இந்தக் கணக்கும் தானாகவே மூடப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.
17 லட்சத்தை பெறுவது எப்படி?
தபால் அலுவலகத்தின் இந்த ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.16 லட்சத்தை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றி இப்போது பேசலாம். எனவே அதன் கணக்கீடு மிகவும் எளிதானது, இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால், இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.10,000 ஆகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் மிச்சமாகும். அதாவது ஐந்து வருட முதிர்வு காலத்தில் நீங்கள் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள், இப்போது கூட்டு வட்டியை 6.7 சதவீதமாகப் பார்த்தால், அது ரூ.1,13,659 ஆக இருக்கும், அதாவது உங்கள் மொத்தத் தொகை ரூ.7,13,659 ஆகிவிடும். .
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்டில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், நீங்கள் அதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அதாவது 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தின் பலனைப் பெறலாம். இப்போது 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ. 12,00000 ஆகவும், அதற்கான வட்டி ரூ. 5,08,546 ஆகவும் இருக்கும். இப்போது வட்டியைச் சேர்த்த பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகையான ரூ.17,08,546 கிடைக்கும்.
மேலும் படிக்க | கடன் கொடுக்கலாமா வேண்டாமா? வங்கிகளை முடிவெடுக்க வைக்கும் 4 முக்கிய விகிதங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ