INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இதுகுறித்து முன்னதாக அவர் குறிப்பிடுகையில்., நாட்டின் பொருளாதாரம் பற்றி இரு கருத்துகளை பதிவிட்டுள்ளேன். மக்கள் அவரவர்கள் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.
2. Population of indigenous cattle declined by 6% between 2012 and 2019. Meaning, the Government's love for the cow is only on paper. It does not translate into increased productivity or fertility.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 19, 2019
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கதில் கால்நடைகளின் இனப்பெருக்கம் 6% அளவுக்கு குறைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., "பசுக்கள் மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளது. கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தியில் அரசின் அக்கறையின்மையை இது சுட்டிக்காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பான கேள்விக்கு 50% மக்கள் மோசமாக உள்ளதாகவும் 30% பேர் மேலும் மோசமடையும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை மிகவும் கடினமாக உள்ளதை புரிந்துக்கொள்ள முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.