புதுடெல்லி: நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹14,500 மோசடி செய்துள்ளனர். நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தப்பியோடிய வைர வர்த்தகர் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி (Mehul Choksi) அவர்களின் சொத்துக்கள் தற்போது ஏலத்திற்கு வருகின்றன.
நிரவ் மோடியின் பெடர் ரோடு பிளாட், கிராஸ்வெனர் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ளது. இரண்டு வாகன நிறுத்துமிடங்களைக் கொண்ட இந்த சொகுசு பிளாட் ஏலம் விடப்பட உள்ளது. இதன் விலை 11.70 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான PNB மோசடி குற்றச்சாட்டின் பேரில் தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சோலார் ஆலையும் ஏலம் விடப்படும். மும்பையைச் சேர்ந்த கடன் மீட்பு தீர்ப்பாயம்-I நிரவ் மோடியின் சோலார் ஆலையை ஏலம் விட்டு, ரூ.2,348 கோடியை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
8,526.20 கோடி மோசடி என்ற மொத்த தொகையில் இது ஒரு சிறிய பகுதியே என்றாலும், கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு மும்பையின் பெடார் ரோடு பகுதியில் உள்ள நீரவ் மோடியின் சொகுசு குடியிருப்பும் ஏலம் விடப்படுகிறது.
5.247 மெகாவாட் திறன் சோலார் ஆலை
மகாராஷ்டிராவின் கண்டலே கிராமத்தில் அமைந்துள்ள நீரவ் மோடியின் சோலார் ஆலை 5.247 மெகாவாட் திறன் கொண்டது. ஆலை மற்றும் இயந்திரங்கள் சேர்த்து இதன் விலை ரூ.12.40 கோடி என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக கடன் வாங்கினால் செய்யக்கூடாத தவறுகள் என்ன?
அக்டோபர் 25ம் தேதி ஏலம் நடைபெறும்
DRT-I இன் அறிவிப்பின்படி, பட்டியலிடப்பட்ட அனைத்து சொத்துக்களின் ஆன்லைன் ஏலம் அக்டோபர் 25 அன்று மதியம் இரண்டு மணிக்குக்த் தொடங்கி, நான்கு மணி வரை நடத்தப்படும். இது தவிர, நீரவ் மோடி மற்றும் அவரது குழும நிறுவனமான ஃபயர்ஸ்டோன் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பெரிய நிலங்களையும் ஏலம் விடவும் டிஆர்டி-ஐ திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு நிலங்களும் தற்போது யூனியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.
மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் நீரவ் மோசடி
மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நீரவ் மோடி இந்திய அரசால் தேடப்படுகிறார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 2019 இல் லண்டனில், நீரவ் மோடி கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக போராடி வரும் நீரவ் மோடி, தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
2022 டிசம்பரில், நாடு கடத்தலுக்கு எதிரான மோடியின் இறுதி மேல்முறையீட்டை பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மோடியை நாடு கடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணையை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ