தனிநபர் கடனா... கிரெடிட் கார்டா... அவசர தேவைக்கு எது சிறந்த தேர்வாக இருக்கும்!

நாம் குடும்ப உறவினர் அல்லது நண்பர்களிடம் நிதி உதவியை நாடவிரும்பாத நிலையில் நாம் தனிநபர் கடனை பற்றி யோசிப்போம். அவசர சூழ்நிலையில், கிரெடிட் கார்டுகளும் ஓர் அளவிற்கு கை கொடுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2023, 08:21 PM IST
  • அவசர தேவைகளுக்கு தனிநபர் கடன் வாங்குவது மிகவும் எளிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
  • தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வாங்க போதுமான அவகாசம் இருக்காது.
  • கடனாக எந்த அளவிற்கு பணம் தேவைப்படும் என்பதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.
தனிநபர் கடனா... கிரெடிட் கார்டா... அவசர தேவைக்கு எது சிறந்த தேர்வாக இருக்கும்! title=

நிதி நெருக்கடி அல்லது நிதி தேவை என்பது பொதுவாக பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலையாகத்தான் உள்ளது. அத்தியாவசிய தேவைகள், அவசர தேவைகள் போன்றவை காரணமாக நிதி உதவியை எதிர்நோக்கும் நிலையை நம் வாழ்வில் கிட்டத்தட்ட அனைவரும் சந்தித்திருப்போம். அப்போது நாம் குடும்ப உறவினர் அல்லது நண்பர்களிடம் நிதி உதவியை நாடவிரும்பாத நிலையில் நாம் தனிநபர் கடனை பற்றி யோசிப்போம். அவசர சூழ்நிலையில், கிரெடிட் கார்டுகளும் ஓர் அளவிற்கு கை கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நிதி தேவைக்காக கிரெடிட் கார்டுகள் அல்லது தனிநபர் கடன்களையே நாடும் போக்கு உள்ளது. 

அவசர தேவைகளுக்கு தனிநபர் கடன் வாங்குவது மிகவும் எளிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மருத்துவ அவசர நிலை கல்வி திருமணம் போன்ற விஷயங்களுக்கு நிதி தேவைப்பட்டால் தனிநபர் கடன் வாங்கலாம். பொதுவாக தனி நபர் கடன்கள் என்பது ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் பெற செயல்முறையும் எளிது. அதே போன்று, கிரெடிட் கார்டுகளில் அடிப்படையில் கடன் வாங்குவதும், அதில் அவசர தேவைக்கான பொருட்களை வாங்குவதும் எளிது. 

இந்நிலையில், மேற்கூறிய இரண்டு விஷயங்களில், எதை தேர்வு செய்வது நல்லது என்பது குறித்து ஆராயலாம். இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் போது கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் 

தேவையைப் பொறுத்து முடிவு 

உங்களுக்கு அவசர தேவையைப் பொறுத்து இரண்டில் ஒன்றை வாங்க முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்காக அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக உடனடியாக ஒரு விமான டிக்கெட் ஒன்றை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். என்றால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வாங்க போதுமான அவகாசம் இருக்காது. இந்நிலையில் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதே சிறந்தது. 

மேலும் படிக்க | வங்கிக் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் அதிகமானது! வட்டி விகிதமும் ராக்கெட் வேகம் எடுக்குமா?

கடனாக தேவைப்படும் தொகை 

உங்களுக்கு கடனாக எந்த அளவிற்கு பணம் தேவைப்படும் என்பதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இன்று 3 அல்லது 4 லட்சம் என்ற அளவிற்கு பணம் தேவைப்படும்போது, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது சரியான முடிவாக இருக்கும். குறைவான அளவில் அதாவது சில ஆயிரங்களில் உங்கள் தேவை நிறைவேறிவிடும் என்றால் கிரெடிட் கார்டினை பயன்படுத்துவது சிறந்தது. ஏனென்றால் கிரெடிட் கார்டில் வாங்கும்போது நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கடனை அடைத்து விடலாம். 

கடனுக்கான வட்டி விகிதம் 

கடனுக்கான வட்டி விகிதம், கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயமாகும். நிச்சயமாக தனிநபர் கடனுக்கான வட்டி என்பது, கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்போது சுமத்தப்படும் வட்டி விகிதத்தை விட குறைவானது என்பதை மறுக்க முடியாது. கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டிற்கு சில சமயங்களில் முப்பது நாற்பது சதவீதங்கள் என்ற அளவில் வட்டி வசூலிக்கப்படுகிறது. குறைந்த காலத்தில் நீங்கள் திரும்ப செலுத்தக்கூடிய பணம் என்றால் கிரெடிட் கார்டினை பயன்படுத்தலாம். ஆனால், அதிக தொகை என்றால், தனிநபர் கடனை சிறந்தது. ஏனென்றால் சரியான நேரத்தில் கட்ட தவறும் போது அதற்காக நீங்கள் செலுத்தும் அபராதமும் வட்டியும் மிகப்பெரிய அளவில் இருக்கும். 

தனிநபர் கடனுக்கான கிரெடிட் மதிப்பெண்கள்

தனிநபர் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடன் எளிதாக கிடைக்கும் என்பதோடு சில வங்கிகள், நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபர்களுக்கு, ஒப்பிட்டு அளவில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | Indian Railways அதிரடி: இனி ரயிலிலேயே வெளிநாடு செல்லலாம்... வெளிவந்த மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News