இந்தியாவில் பான் கார்டு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி நபர்களும், நிதி நிறுவனங்களின் பெயர்களிலும் பான் கார்டு வழங்கப்படுகிறது. குறிப்பாக வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருப்பது அவசியம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பான் கார்டு இன்றியமையாத ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இந்நிலையில் PAN 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் வசதிகளையும், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரி தொடர்பான சேவைகளை அணுகவும் நோக்கமாக கொண்டுள்ளது.
PAN 2.0 என்றால் என்ன?
பட்ஜெட்டில் PAN 2.0 திட்டத்திற்காக ரூ. 1,435 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. PAN 2.0 திட்டத்தின் மூலம் PAN மற்றும் TAN சேவைகளை தற்போது உள்ளதைவிட இன்னும் நவீனமாக்க முடியும். இந்த திட்டம் விரைவான சேவைகளை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PAN 2.0 திட்டத்தில் மத்திய அரசின் நிதி சார்ந்த பல தளங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், வரி செலுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பான மற்றும் எளிமையான அனுபவத்தை வழங்க முடியும். கூடுதலாக இந்த திட்டத்தின் மூலம் போலி பான் கார்டுகளை அடையாளம் கண்டு அதனை ரத்து செய்ய முடியும். மேலும் பான் தொடர்பான அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கும் இந்த திட்டம் உதவும்.
யார் யார் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்?
வருமான வரி செலுத்தக்கூடிய அனைவரும் பான் கார்ட் வைத்திருக்க வேண்டும். மத்திய அரசின் வரி விலக்கு வரம்புக்கு மேல் வருமானம் கொண்ட அனைவருக்கும் பான் எண் தேவை. வருமான வரி சட்டத்தின் பிரிவு 139(4A)ன் அறக்கட்டளைகளுக்கு பான் எண் அவசியமானது. ரூ. 5 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட வணிக மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளில் நுழைய விரும்பும் அனைவரும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
பான் கார்டு இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா?
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால், போலி பான் கார்ட் வைத்திருந்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரிச் சட்டத்தின் 272பி பிரிவு விதிகளுக்கு இணங்காதவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
PAN 2.0ன் சிறப்பம்சங்கள்
இந்தியாவில் பான் கார்டு 1972ம் ஆண்டு முதல் செயல்பட்டில் உள்ளது. வரி செலுத்துவது முதல் TDS வரை அனைத்திற்கும் பான் எண் அவசியம். PAN 2.0 திட்டத்தின் மூலம் PAN மற்றும் TAN அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய முடியும். மத்திய அரசின் பல தளங்களை ஒரே இடத்தில் அணுகி கொள்ளலாம். பயனர்களின் தரவுகள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும்படி தரவுகள் இருக்கும்.
மேலும் படிக்க | EPFO 3.0: ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி EPFO பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ