ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; போனஸாக 78 நாட்கள் ஊதியம்!

11 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதற்காக ரூ .2024 கோடி செலவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Sep 18, 2019, 04:04 PM IST
ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; போனஸாக 78 நாட்கள் ஊதியம்! title=

11 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதற்காக ரூ .2024 கோடி செலவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!

ஒரு முக்கிய அமைச்சரவை முடிவில் இந்த முடிவு எடக்கப்பட்டதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவிக்கையில்., "இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போனஸ். உற்பத்தித்திறன் ஊக்குவிக்கும் (Productivity Linked Bonus) விதமாக அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி இது" என குறிப்பிட்டார்.

மேலும்., இந்த அறிவிப்பின் மூலம் 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக கிடைக்கும். எனவும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

1979-80 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்ட போது அரசாங்கத்தின் முதல் துறைசார் நிறுவனமாக ரயில்வே துறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில் ஒரு உள்கட்டமைப்பு ஆதரவாக ரயில்வேயின் முக்கிய பங்கு அந்த நேரத்தில் இருந்தது. ரயில்வே பணியின் ஒட்டுமொத்த சூழலில், ‘போனஸ் செலுத்தும் சட்டம் - 1965’ என்ற வரிகளில் போனஸ் என்ற கருத்தாக்கத்திற்கு எதிராக PLB என்ற கருத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

2017-18 நிதியாண்டில், அரசுக்கு ரூ .20,44.31 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட அனைத்து தகுதி வாய்ந்த வர்த்தமானி அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் (RPF/RPSF பணியாளர்களைத் தவிர) 78 நாள் ஊதியத்திற்கு சமமான PLB செலுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் நடைப்பெற்ற இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய அமைச்சரவை முடிவுகளில், மின்னணு சிகரெட்டுகளை தடை செய்வதற்கான (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) கட்டளை, 2019-க்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

மின்-சிகரெட்டுகளைத் தடை செய்வதற்கான முடிவு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை ஈ-சிகரெட்டுகள் மூலம் அடிமையாக்கும் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Trending News