ஜாக்பாட் செய்தி!! இனி மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Old Pension Scheme:  2005, நவம்பர்  1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2024, 10:03 AM IST
  • அரசாங்க முன்மொழிவு கூறுவது என்ன?
  • திட்டத்திற்கான ஒப்புதல் கடந்த மாதம் கிடைத்தது
  • 9.5 லட்சம் ஊழியர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன
ஜாக்பாட் செய்தி!! இனி மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் title=

Old Pension Scheme: கடந்த பல மாதங்களாக, மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பல மாநில அரசு ஊழியர்களும் இந்த திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை அரசாங்கங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இன்னும் பல மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தின் வசதிகள் தங்களுக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலவித போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஓபிஎஸ்
 
இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது.  2005, நவம்பர்  1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மகாராஷ்டிரா மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.

அரசாங்க முன்மொழிவு கூறுவது என்ன (Government Proposal)

2005 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பணிக்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டு, ஆனால் அதற்கான தேர்வு குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் செய்யப்பட்டிருந்தால், அத்தகைய ஊழியர்களுக்கும் (State Government Employees) ஓபிஎஸ் திட்டத்தின் கீழ் பலன்களை பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்த அரசு முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கை நிறைய பணம் சம்பாதிக்க அருமையான சலூன் பிசினஸ்... மாதம் லட்சங்களை அள்ளலாம்

திட்டத்திற்கான ஒப்புதல் கடந்த மாதம் கிடைத்தது

கடந்த மாதம் இப்படிப்பட்ட ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு (National Pension Scheme) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தின் (Old Pension Scheme) கீழ் பலன்களை அளிப்பதற்கான அரசின் முன்மொழிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசாங்கம் வெளியிடப்பட்ட இந்த முன்மொழிவில் ஆறு மாதத்திற்குள் இதற்காக விண்ணப்பிக்காத தொழிலாளர்கள் எப்போதும் போல தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் உள்ள நன்மைகளை பெறுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.5 லட்சம் ஊழியர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன

மஹாராஷ்டிராவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து மாநில அரசாங்கம் (State Government) இதற்கு ஒப்புக்கொண்டது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த சுமார் 9 லட்சம் 50000 அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் பலன்களை அனுபவித்து வருகிறார்கள். 

OPS vs NPS: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன

2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய முறை (NPS) என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004 ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அந்த தேதிக்குப் பிறகு அரசு பணிகளில் சேர்ந்த பணியாளர்கள் (Employees) தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஓய்வதிய முறையில் (Pension Scheme) பணியாளர்கள் 10 சதவீதத்தை இந்த திட்டத்திற்காக பங்களிக்க வேண்டும். எனினும் பழைய ஓய்வத் திட்டத்தில் பணியாளர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக (Pension) பெறுவார்கள். ஆகையால் இந்த இரு ஓய்வூதிய முறைகளையும் ஒப்பிடும் போது பழைய ஓய்வூதியத் திட்டமே பணியாளர்களுக்கு அதிக லாபகரமானதாக இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News