இனிமேல் வெயிட்டிங்கே இல்ல! துரிதமாய் செயல்படும் இந்தியன் ரயில்வேயின் அடுத்தகட்ட நடவடிக்கை

No More Waiting Lists: இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனை இருக்காது? காத்திருப்பு பட்டியல் பிரச்சனைக்கு முடிவு கட்ட இந்திய ரயில்வே முடிவு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 15, 2023, 10:25 PM IST
  • ரயில் டிக்கெட் முன்பதிவு
  • எத்தனை மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்?
  • தட்கல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு
இனிமேல் வெயிட்டிங்கே இல்ல! துரிதமாய் செயல்படும் இந்தியன் ரயில்வேயின் அடுத்தகட்ட நடவடிக்கை title=

புதுடெல்லி: அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கேற்ப, இந்திய ரயில்வே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தீட்டியிருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில், அவர்கள் படிப்படியாக பழைய ரயில்களுக்கு விடை கொடுத்துவிட்டு, புதிய ரயில்களை, இந்தியன் ரயில்வே கொண்டுவரவிருக்கிறது. அதன்படி, 7,000-8,000 புத்தம் புதிய ரயில்கள் நாட்டுக்கு கிடைக்கும். இதற்காக, இந்திய இரயில்வே ரூ. 1 லட்சம் கோடி செலவிடவிருக்கிறது. 

அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பழைய இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளுக்கு பதிலாக பளபளப்பான புதிய ரயில் பெட்டிகளை வழங்கும் திட்டத்துடன் ரயில்வேத் துறை இயங்கிவருகிறது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவையால் உருவாகியுள்ள இந்த இலக்கு, 7,000-8,000 புதிய ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு வகை செய்யும். இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான டெண்டர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளுக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மில்லியன் கணக்கான இந்திய பயணிகளுக்கு மென்மையான, நவீன ரயில் அனுபவத்தை உறுதியளிக்கும் இந்திய ரயில்வே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான 7,000-8,000 புத்தம் புதிய ரயில்களை வரவேற்கும். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கோவிட்-19 கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகிறது!

அதன்படி,1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு, மில்லியன் கணக்கானவர்களுக்கு மென்மையான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை இந்திய ரயில்வே உறுதி செய்யும்.   

இந்திய ரயில்வே இமயமலை வழியாக காஷ்மீர் ரயில் இணைப்பை உருவாக்க புதுமையான சுரங்கப்பாதை முறையை உருவாக்குகிறது
லட்சிய காஷ்மீர் ரயில் இணைப்புத் திட்டம், 111-கிமீ பெஹிமோத். இதற்காக சுரங்கப்பாதை தோண்டுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

3.2 கிமீ தொலைவிலான மலைகள் வழியாகச் செல்லும் அற்புத பாதையில் பயணிக்கும் ரயிலில் பயணிக்க பயணிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ரானர். அதற்காக, தொலைநோக்கு பார்வை கொண்ட பொறியாளர்கள் அற்புதமான சுரங்கப்பாதை முறையை வகுத்துள்ளனர்.

75 வந்தே பாரத் ரயில்களை வெளியிட திட்டம் 

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக நீண்ட தூர வழித்தடங்களில் ரயில்களின் ஸ்லீப்பர் பதிப்புகளை இயக்கவும் ஆர்வமாக உள்ளது.
 
"ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் பாதை மிக விரைவில் முடிந்தவுடன், வந்தே பாரத் இயக்கப்படும்," என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த நிதியாண்டில் ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் பாதை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் ஒரு தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவை அந்த வெப்பநிலை மற்றும் உயரத்தில் மிகவும் சீராக இயங்கும் என்று வைஷ்ணவ் கூறினார். ஒரு கணக்கெடுப்பின்படி, வந்தே பாரத் விரைவு ரயில்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் வசதி மற்றும் வேகத்திற்காக பிரபலமாக உள்ளன.

மேலும் படிக்க | அவசர அவசரமாய் மூடப்படும் பேங்க் லாக்கர்கள்! வங்கி பெட்டக விதி மாற்றங்களின் எதிரொலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News