ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஜூன் முதல் அமலுக்கு வரும் அரசாங்க விதிமுறைகள்!

Rules Change From 2024 June 1: சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை முதல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என பல விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2024, 08:09 PM IST
  • சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் மாற்றங்கள்
  • எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்
  • ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் மாற்றம்
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஜூன் முதல் அமலுக்கு வரும் அரசாங்க விதிமுறைகள்!  title=

புத்தாண்டாக 2024ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடியும் நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் சில விதிமுறைகள் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை முதல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என பல விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் புதிய மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். 

மாற்றப்பட்ட விதிகள்
ஜூன் 1, 2024 முதல் விதிகள் மாறும் என்பதால், இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால், உங்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்துவிடும் இல்லாவிட்டால், அபராதம் கட்ட நேரிடலாம். இதுபோன்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்க புதிய விதிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.   

சமையல் ஏரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்

எண்ணெய் நிறுவனங்கள் மாதமாதம் முதல் தேதியன்று தான், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்கின்றன. காஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி காலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த முறையும் ஜூன் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலை வெளியிடப்படும். 14 கிலோ எடையுள்ள உள்நாட்டு மற்றும் 19 கிலோ வர்த்தக சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கும். ஜூன் முதல் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை, அன்று காலை வெளியிடப்பட்ட விலைப்பட்டியலின் படியே இருக்கும்.

மேலும் படிக்க | வங்கிகள் கொடுக்கும் அதிகபட்ட வட்டி! இது நிலையான வைப்பு எஃப்.டி விகிதங்கள்!

ஆதார் அட்டை புதுப்பிப்பு
ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பான தகவல்களை UIDAI அளித்துள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூன் 14 வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக ஆதார் அட்டையில் உள்ள தகவல்களில் மாற்றம் செய்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஆன்லைன் மாற்றத்திற்கு மட்டுமே. ஆஃப்லைன் புதுப்பிப்புக்கு அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று புதுப்பித்தால், ஒரு மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 

ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்

ஜூன் 1 முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் ஏற்படும். ஜூன் 1 முதல், ஓட்டுநர் உரிமம் பெற RTO-க்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றும் டிஎல் தயாரித்துக்கொள்ளலாம், புதிய விதியின்படி ஆர்டிஓவிடம் சென்று தேர்வு எழுதத் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் இருந்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

சிறார்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்

ஜூன் 1 முதல், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், 25,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கடன் கொடுக்கலாமா வேண்டாமா? வங்கிகளை முடிவெடுக்க வைக்கும் 4 முக்கிய விகிதங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News