New I-T e-filing portal: பல அம்சங்கள் செயல்படவில்லை; பயனர்கள் அவதி

வருமான வரித் துறையின் புதிய போர்டல் தொடங்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2021, 12:19 PM IST
  • படிவம் 15 சிஏ மற்றும் படிவம் 15 சிபி ஆகியவை பதிவேற்றப்படவில்லை
  • சுயவிவர புதுப்பிப்பில் பல குறைபாடுகள் உள்ளன
  • பான் கார்டு மற்றும் ஆதார் ஆகியவற்றில் அடிக்கடி புதுப்பிப்புகள் கேட்கப்படுகின்றன
New I-T e-filing portal: பல அம்சங்கள் செயல்படவில்லை; பயனர்கள் அவதி title=

புதுடெல்லி: புதிய வருமான வரி போர்டல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பயனர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். புதிய வருமான வரி போர்ட்டலின் பல அம்சங்கள் செயல்படவில்லை. புதிய ஐ-டி இ-ஃபைலிங் போர்டலில் பல குறைபாடுகள் இருப்பதாக பலரும் குறை கூறுகின்றனர்.

வருமான வரித் துறையின் புதிய போர்டல் தொடங்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த புதிய போர்ட்டலின் பல தொழில்நுட்ப குறைபாடுகள் வெளிவருகின்றன, பல அம்சங்கள் செயல்படாததால், பயனர்கள் உள்நுழைய முடிவதில்லை, பரிவர்த்தனைகளில் தாமதம் ஆகிறது என்று பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants) கூறுகின்றனர்.

http://www.Incometax.Gov.In/ என்ற புதிய போர்ட்டலை வருமான வரித்துறை ஜூன் 7ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. புதிய போர்டல் பயனர் நட்பாக இருக்கும் என்று வருமானவரித் துறையும் அரசாங்கமும் உறுதியளித்திருந்தன. ஆனால், புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரி செலுத்துவோர் இதற்கு முன்னர் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கை (previous e-file return) காண முடியாது என்று பட்டய கணக்காளர்கள் கூறுகின்றனர். இது தவிர, 'coming soon' விருப்பம் இன்னும் பல அம்சங்களில் வருகிறது. 

Also Read | வருமான வரி தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்

புதிய போர்ட்டலில் பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:
1.பயனர்கள் உள்நுழைவதில் சிக்கல் உள்ளது
2.பணத்தைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறை செயல்பெறவில்லை.
3.வரி செலுத்துவோர் இதற்கு முன்னர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை இந்த போர்டலில் பார்க்க முடியாது. இது மிகப் பெரிய பின்னடைவு.
4.படிவம் 15 சிஏ மற்றும் படிவம் 15 சிபி ஆகியவை பதிவேற்றப்படாததால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட தொகை சிக்கியுள்ளது.
5.இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அனுப்பும் பணத்திற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
6.புதிய நிறுவனங்களை பதிவு செய்ய முடியவில்லை.
7.சுயவிவர புதுப்பிப்பில் பல குறைபாடுகள் உள்ளன, பான் கார்டு மற்றும் ஆதார் ஆகியவற்றில் அடிக்கடி புதுப்பிப்புகள் கேட்கப்படுகின்றன.

Also Read | வருமான வரி தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்போசிஸ் (Infosys) மற்றும் அதன் தலைவர் நந்தன் நிலேகானியிடம் கேட்டுக் கொண்டார். இன்போசிஸ் நிறுவனம் தான் வருமானவரித்துறையின் இந்த புதிய போர்ட்டலைத் உருவாக்கியது.

புதிய போர்டல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பயனர்கள் இந்த போர்ட்டலின் தொழில்நுட்ப சிக்கல்களை, சமூக ஊடகங்கள் மூலம் நிதியமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். இதன் பின்னர், ட்வீட் செய்த நிதியமைச்சர் சீதாராமன், பிரச்சினையை தீர்க்குமாறு இன்போசிஸிடம் கேட்டுக் கொண்டார். நிதியமைச்சரின் ட்வீட்டுக்கு பதிலளித்த நிலேகனி, பிரச்சினைகளை தீர்ப்பதில் தாங்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார் . ஆனால், பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

 2019 ஆம் ஆண்டில், நவீன வருமான வரி திருப்பிச் செலுத்தும் முறையை (next generation income tax refund system) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இன்போசிஸுக்கு வழங்கப்பட்டது. வரி தாக்கல் செயல்பாட்டை துரிதப்படுத்துவதும், வரி செலுத்தியவர்கள் செலுத்திய உபரி வரியை திருப்பிச் செலுத்தும் பணியை துரிதப்படுத்துவதும் இதன் நோக்கம்.

Also Read | Income Tax Saving: வருமான வரியைச் சேமிக்க மனைவி உதவலாம், இரட்டை நன்மை கிடைக்கும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News