மாபெரும் பணக்காரி மெலானியாவா? இல்லை இவாங்காவா? @Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்திருக்கும் டொனால்ட் டிரம்பை, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால், தற்போது மெலனியா டிரம்ப் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2020, 03:12 PM IST
  • அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேர்தல் தோல்விக்கு பிறகு அவரது மனைவி விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன
  • மெலனியா விவாகரத்து வாங்கினால் டிரம்பின் சொத்தில் இருந்து அவருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பது ஹாட் டாபிக்
  • மெலனியாவுக்கு தனிப்பட்ட சொத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது
மாபெரும் பணக்காரி மெலானியாவா? இல்லை இவாங்காவா? @Trump title=

அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்திருக்கும் டொனால்ட் டிரம்பை, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால், தற்போது மெலனியா டிரம்ப் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.

50 வயதான மெலனியா டிரம்ப், 74 வயதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார். 2017 ல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மெலனியா டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தார் டொனால்ட் டிரம்புக்கு ஏற்கனவே வேறு மனைவி மூலம் இவான்கா டிரம்ப் உட்பட நான்கு வாரிசுகள் உள்ளன.\

மெலனியா, டிரம்பை விவாகரத்து செய்தால் மிகப் பெரிய அளவிலான பணம் அவருக்கு கிடைக்கும், இதில் மெலனியாவுக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும், டிரம்ப்-மெலனியாவின் மகனுக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பதுதான் இன்றைய ஹாட்-டாபிக். 

சரி, மெலனியா டிரம்ப்பின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

செலிபிரிட்டி நெட் வொர்த் (Celebrity Net Worth) இவ்வாறு கூறுகிறது: கருத்துப்படி, மெலனியா 38.6 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் செல்வ சீமாட்டி மெலானியா டிரம்ப். டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்னரே, மெலனியாவுக்கு அதிக சொத்து இருந்தது. மெலனியா கடந்த காலங்களில் பல வெற்றிகரமான தொழில்களை செய்து லாபகரமாக நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1998இல் முதன்முதலில் டொனால் டிரம்பை சந்தித்தபோது,  மெலனியா நியூயார்க்கில் பிரபலமான மாடலாக இருந்தார். வோக் (Vogue), வேனிட்டி ஃபேர் (Vanity Fair) மற்றும் நியூயார்க் மேகசின் (New York Magazine) போன்ற பெரிய பிராண்டுகளுக்கு மாடலிங் செய்த மெலனியா மிகவும் பிரபல மாடலாக இருந்தபோது, அவருக்கு கிடைத்த சம்பளம் மிகவும் அதிகம். தனது மாடலிங் தொழில் மூலமே மெலனியா நிறைய  செல்வத்தை சேர்த்துக் கொண்டார்.

மாடலிங் தொழிலைத்தவிர, மெலனியா வேறு சில சொந்த தொழில்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். Melania Timepieces என்ற அவரது ஆபரண நிறுவனம், ஆடம்பரமான நகைகள் விற்பனைக்கு பெயர் பெற்றது.  

Melania Skin Care Collection என்ற நிறுவனத்தின் மூலம் அழகுப் பொருட்கள் மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களையும் அறிமுகப்படுத்தினார் மெலனியா. இது வயதாவதை தாமதப்படுத்துவது மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்தது.

சரி, மெலனியாவின் சொத்து இப்படி அபாரமாக இருக்கிறது என்றால் அவருக்கு சளைத்தவரா மெலனியாவின் சக்களத்தி மகள் இவாங்கா டிரம்ப். இவாங்காவின் சொத்தின் நிகர மதிப்பு என்ன தெரியுமா?

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் கூற்றுப்படி, இவான்காவின் சொத்து மதிப்பு 289 மில்லியன் ஆகும். அதாவது மெலனியாவை விட பெரிய பணக்காரி இவாங்கா. இவாங்காவும் ஒரு மாடலாக பணியாற்றியவர், அதன் மூலம் சொத்துக்களை சேர்த்தார். பிறகு தொழில் துறையில் கால் பதித்த இவாங்கா, குடும்பத்திற்கு சொந்தமான டிரம்ப் அமைப்பின் (Trump Organization) நிர்வாக துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் இவான்கா 27 மில்லியன் அளவிற்கு வருமானம் ஈட்டினார்.
ஹோட்டல் துறையில் கொடி கட்டிப் பறாக்கும் Trump hotel குழுமத்தின் ஹோட்டல்களின் உள்துறை வடிவமைப்பையும் நிர்வகிப்பவரும் இவாங்கா தான்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News