Vishwakarma Yojana: விவசாயிகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும், சமூக ரீதியில் பின்தங்கியிருப்பவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளனர். இதில் பல திட்டங்கள் பயனாளிகளிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில திட்டங்களில் பயனாளிகளுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது சிறு தொழிலாளர்களுக்காக 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் செயல்படுத்துவதற்கு முன், திங்கள்கிழமையான இன்று பிரதமர் மோடி மாநிலங்களின் மூத்த அதிகாரிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) ஆகியோருடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
தச்சர், கொத்தனார் மற்றும் பொற்கொல்லர் போன்ற பாரம்பரிய திறன்களைக் கொண்ட சிறு தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறு, குறு தொழிலாளர்களாகிய நீங்கள், உங்களின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வாதாரமான வருமானத்தை வாய்ப்புகளை அதிகரிக்க, ஒட்டுமொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பட்ஜெட்டில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
எப்போது அறிமுகம் தெரியுமா?
பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், திறன் மேம்பாடு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் எத்தனை பேர்?
பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திறன் மேம்பாடு அமைச்சகம் ஆகஸ்ட் 28ம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதில், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள், எஸ்எல்பிசி பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பயிற்சி
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் வரைவு செயல்படுத்தல் மற்றும் திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறை ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதிகாரி கூறினார். இத்திட்டத்தின் கீழ், திறமையான தொழிலாளர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்த 4-5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் கடன் பெற தகுதியுடையவர்கள். நடப்பு நிதியாண்டில், மூன்று லட்சம் பயனாளிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என, அதிகாரி தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | ஊழியர்-ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! ஓய்வு பெறும் வயதில் பெரிய மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ