இந்தியன் ரயில்வே புதுப்பிப்பு: ஒடிசாவின் பாலசோரில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் பலரது மனங்களில் அப்படியே உள்ளது. இந்த கோர விபத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இந்திய ரயில்வே தனது பயணிகளுக்காக புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. பாலசோர் விபத்தில் உயிரிழந்த பயணிகளில் 70 சதவீதம் பேர் ரயில்வே வழங்கும் காப்பீட்டைத் தேர்வு செய்யாமல், இந்த சிறப்பு வசதியை இழந்துள்ளனர். புதிய முறையின் கீழ், இப்போது பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவுடனேயே காப்பீட்டின் பாதுகாப்பைப் பெறுவார்கள். இதற்கு ஈடாக ஆகும் செலவும் மிகக் குறைவாக இருக்கும்.
ஐஆர்சிடிசி -யில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வழங்கப்படும் இன்சூரன்ஸ் வசதியை ரயில்வே டீஃபால்ட், அதாவது இயல்பாகவே கிடைக்கும் வசதியாக செய்துள்ளது. அதாவது, இப்போது பயணிகள் இந்த வசதிக்காக ஒரு தனி விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டியதில்லை. மாறாக இந்த விருப்பம் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். இந்த வசதியின் கீழ், விபத்து ஏற்பட்டால், ரயில்வே 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்குகிறது. இதற்கான விலை வெறும் 35 பைசா மட்டுமே. இதுவரை இந்த தனிநபர் விபத்துக் காப்பீடு வசதி ஆப்ஷனல் வசதியாக இருந்தது. அதாவது பயணிகள் விருப்பப்பட்டால் இந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம் என்ற முறை இருந்தது.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இந்த வசதியை தேர்வு செய்யவில்லை என்று ரயில்வே கண்டறிந்துள்ளது. பயணிகளின் நலன் கருதி இந்த வசதி தற்போது தானியங்கி முறையில் (ஆடோமேடிக்) செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அதைத் தனியாக தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. ரயிலுக்கான டிக்கெட்டுடன் இந்த வசதி தானாகவே பயணிகளுக்கு கிடைக்கும். பாலசோர் விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகள் இந்த வசதியைத் தேர்வு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் பெரிய காப்பீட்டைப் பெறுவதைத் தவறவிட்டனர். இதை மனதில் வைத்து தற்போது இந்த வசதியை தானியங்கி முறையில் ரயில்வே செய்துள்ளது.
இந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்காமலும் இருக்கலாம்
தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைக் கொண்ட இந்தக் காப்பீட்டை ரயில்வே பயணிகள் மீது கட்டாயப்படுத்துகிறது என்றும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. பயணிகளுக்கு விருப்பம் இல்லை என்றால், அவர்கள் இந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்காமலும் விட்டுவிடலாம். இதை செய்ய, அவர்கள் இப்போது விலகல் விருப்பத்தை (ஆப்ட் அவுட்) கிளிக் செய்ய வேண்டும். ஆனால், 10 லட்சம் இன்சூரன்ஸ் வசதிக்கு, ரயில்வே 35 பைசா மட்டுமே வாங்கி வருவதால், அதை விடுவது சரியான நடவடிக்கையாக கருதப்படாது. இந்த காப்பீட்டின் கீழ், ரயில் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்போ அல்லது ஊனமோ ஏற்பட்டால் இழப்பீடும், காயங்களுக்கான சிகிச்சை செலவும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | இனி இந்த வசதி கிடையாது.. ரயில்வே மந்திரி அதிரடி முடிவு: உடனே தெரிஞ்சிக்கோங்க
பாலசூர் விபத்தில் என்ன நடந்தது
பாலசோர் விபத்தில் இருந்து பாடம் கற்று இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளதாக வழக்குடன் தொடர்புடைய அதிகாரி கூறுகிறார். IRCTC இலிருந்து இந்த காப்பீட்டை எடுக்கும்போது, SBI ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த மாதம், பாலசோர் விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்தனர், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எத்தனை பேருக்கு காப்பீட்டின் கவரேஜ் கிடைத்தது?
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) வழங்கிய தகவலின்படி, பாலசோர் விபத்தில் பலியான 624 பயணிகள் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர். இதில், 22 கோரிக்கைகளின் கீழ் சிகிச்சை செலவுக்காக மொத்தம் ரூ.60.52 லட்சம் செலுத்தப்பட்டது. இருப்பினும், ஒரு மரணம் கூட காப்பீட்டுக்காக கோரப்படவில்லை. லிபர்ட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் 5 க்ளெய்ம்களைப் பெற்றுள்ளது. அதில் இரண்டு க்ளைம்களில் ரூ.17,800 செலுத்தப்பட்டுள்ளது, மேலும் 3 க்ளைம்களில் ரூ.6 லட்சம் இன்னும் செலுத்தப்படவில்லை. எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் 17 க்ளைம்களைப் பெற்றுள்ளது, அதில் 50.52 லட்சம் ஊனமுற்றோர் மற்றும் சிகிச்சைக்காக கோரப்பட்டுள்ளது. இதுவரை 2.25 லட்சம் ரூபாய்க்கான 2 கோரிக்கைகள் செட்டில் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இனி ரயிலில் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ