பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ‘இதை’ செய்யுங்கள்! சமந்தா கொடுக்கும் டிப்ஸ்..

Samantha Tips To Build Confidence In Women : நடிகை சமந்தா, பெண்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க சில டிப்ஸ்களை கொடுக்கிறார். அவை என்னென்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2024, 04:40 PM IST
  • பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள டிப்ஸ்
  • சுயத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது
  • வேறு என்னெல்லாம் செய்ய வேண்டும்?
பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ‘இதை’ செய்யுங்கள்! சமந்தா கொடுக்கும் டிப்ஸ்.. title=

Samantha Tips To Build Confidence In Women : கடந்த சில ஆண்டுகளாகவே, பல சிரமங்களை சந்தித்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நொந்து போன நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், சமந்தா. இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை, இவர் கூறாமலேயே ரசிகர்கள் அறிவர். பலர், இவரை தன்னம்பிக்கைக்கு உதாரணமாகவும் பார்த்து வருகின்றனர். பெண்கள், இவைப்போல தைரியமாக இருக்க, என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ சில டிப்ஸ். 

உடல் மற்றும் மனநலன்:
 
சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக தன் வாழ்வில் என்ன நடந்தாலும் உடல் மற்றும் மனநலனில் அக்கறை எடுத்துகொள்ள தவறாதவர். யோகா செய்வது, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது, ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் செய்வது இவரது உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பலமாக்கியது. உடற்பயிற்சிகள் இவரை இன்னும் மன உறுதி மிக்கவராக மாற்றியதாம். தன் சுயமரியாதையை வளர்த்துக்கொள்வது குறித்து ஒரு முறை பேசிய அவர், மனநல ஆலோசனைகள் மற்றும் செல்ஃப் கேர் செய்வது அதற்கு உதவியதாக கூறியிருக்கிறார். 
 
சவால்களை எதிர்கொள்ளுதல்:
 
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நம்மை நோக்கி வரும் சவால்களை நேர்பட எதிர்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் சமந்தா. தோல்விகளையும், கடினமான தருணங்களையும் கண்டு பயப்படாத அவர், கற்றல் மற்றும் அனுபவங்களை கொண்டு தன் தைரியத்தை வளர்த்துக்கொள்கிறார். 
 
கனிவாக நடப்பது:
 
நாம் அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது முக்கியம். ஆனால், அதைவிட முக்கியமானது நம்மிடத்தில் நாம் கனிவாக நடப்பது. உங்களின் ஒவ்வொரு பாகத்தையும் முழுதளவாக உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் திறன் இருக்க வேண்டும். நாம் அனைவருக்கும் அனைத்து இடத்திலும் சரியான ஆளாக இருந்துவிட முடியாது. எனவே, உங்களிடம் இருக்கும் நிறை, குறைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் காதலிக்க ஆரம்பித்தாலே இந்த உலகம் உங்களை முழுமையாக காதலிக்க ஆரம்பித்து விடும்.
 
நன்றியுணர்வு:
 
சமந்தா, தன் வாழ்வில் எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதை பாசிடிவாக பார்ப்பதற்கு காரணம், அவரது நன்றியுணர்வு. தன் வாழ்வில் தனக்கு கிடைக்காத விஷயங்களை நினைப்பதை விட்டுவிட்டு, கிடைத்தவற்றை நினைத்து அதை கொடுத்த இந்த யுனிவர்ஸிற்கு நன்றி கூறுகிறார். இது, அவருக்கு பல நேரங்களில் பாசிடிவான கோணங்களை காட்டுகிறது. 
 
 
Samantha
 
தனிப்பட்ட வளர்ச்சி:
 
சமந்தா, எந்த நிலையில் இருந்தாலும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துபவராக இருக்கிறார். தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்வதால் தன்னால் முன்னேற முடியு என நினைக்கும் அவர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். நாம் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்தால்தான் தன்னம்பிக்கை வளரும் என்று கூறும் இவர், நமக்கென்று ஒரு இலக்கை நிர்ணயம் செய்தல், உங்களை வளர்த்துக்கொள்ள உதவும். 
 
நோக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்:
 
நம் வாழ்க்கை எதை நோக்கி போக வேண்டும், எந்த உயரத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் எப்போதும் நாம் இணைந்திருத்தல் அவசியம். அது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதாக இருக்கலாம்,  மனதளவில் பலமிக்கவராக மாறுவதாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அந்த இலக்குடன் நீங்கள் இணைந்திருத்தல் நல்லது.
 
நம்பகத்தன்மை:
 
வாழ்க்கை நம் மீது எதை தூக்கி எறிந்தாலும், நாம் எவ்வளவு கீழே போகும் நிலை ஏற்பட்டாலும், எந்த நிலையிலும் நாம் நமது சுயத்தில் இருந்து மாறாமல் நம்பகத்தன்மையுடன் இருப்பது அவசியம். இந்த சமூகத்திற்காக, நம்மை மாத்திக்கொண்டால் கடைசியில் மகிழ்ச்சியற்று இருக்கப்போவது நாம்தான் என்கிறார், சமந்தா. 
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News