Major Tasks To Complete Before March 31: நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகளை பற்றி நினைவில் வைத்து அவற்றை செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும். புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது, வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வது, FASTag இன் KYC விவரங்களைப் பூர்த்தி செய்வது, சிறு சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் செய்வது என நீங்கள் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அப்டேடட் ஐடிஆர் தாக்கல் (Updated ITR Filing)
தங்கள் ITR இல் புதுப்பிக்கப்பட்ட விவரங்களைப் பற்றி குறிப்பிட விரும்பும் வரி செலுத்துவோர் மார்ச் 31 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை (Updated ITR) தாக்கல் செய்யலாம். FY 2020-21 (AY 2021-22) ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை இந்தத் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். இந்த நிதியாண்டில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யாத அல்லது தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் காட்ட முடியாமல் போன அல்லது தங்கள் வருமான வரிக் கணக்கில் சில தவறான விவரங்களைத் தாக்கல் செய்துள்ள வரி செலுத்துவோர் வருமான வரி போர்ட்டலுக்குச் சென்று புதுப்பிக்கப்பட்ட ரிட்டனைத் தாக்கல் செய்யலாம்.
வரி சேமிப்பு முதலீடு (Tax Saving Investment)
2023-24 நிதியாண்டுக்கான பழைய வரி முறையில் நீங்கள் வரிகளை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு வரி விலக்கையும் கோரலாம். இதற்கான வரிச் சேமிப்புத் திட்டங்களில் இதற்கு முன் முதலீடு செய்யவில்லை என்றால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் முதலீடு செய்து வரியைச் சேமிக்கலாம். பிரிவு 80C இன் கீழ், வரியைச் சேமிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. PPF, ELSS, சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செலமகள் சேமிப்பு திட்டம் (SSY), டெர்ம் டெபாசிட், என்.பி.எஸ் மற்றும் தபால் அலுவலகத்தின் மற்ற சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
டிடிஎஸ் தாக்கல் (TDS Filing)
ஜனவரி, 2024 -இல் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கிடைத்த வரிவிலக்குக்கு வரி செலுத்துவோர் மார்ச் மாதத்தில் TDS தாக்கல் சான்றிதழைக் காட்ட வேண்டும். பிரிவு 194-IA, 194-IB மற்றும் 194M ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு செய்யப்பட்டிருந்தால், மார்ச் 30 ஆம் தேதிக்குள் சலான் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! கட்டணத்தை உயர்த்திய வங்கி!
ஜிஎஸ்டி காம்போசிஷன் திட்டம் (GST Composition Scheme)
தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் 2024-25 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி காம்போசிஷன் திட்டத்திற்கு மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு குறிப்பிட்ட வருவாய் உள்ள தகுதியான வணிக வரி செலுத்துவோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது மிகவும் எளிமையான வரி கட்டமைப்பு திட்டமாக உள்ளது. இதற்கு CMP-02 படிவத்தை நிரப்ப வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 1.5 கோடியாக உள்ள ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சில சிறப்புப் பிரிவின் கீழ் இது ரூ.75 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு இது ரூ.1.5 கோடியாகவும் மற்ற சேவை வழங்குனர்களுக்கு ரூ.50 லட்சமாகவும் உள்ளது.
குறைந்தபட்ச முதலீட்டு நிபந்தனை (Post Office Minimum Deposit)
பிபிஎஃப் (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி உள்ளிட்ட பிற அரசாங்க ஆதரவு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு நிதியாண்டிலும் உங்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். பிபிஎஃப் -இல் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் எஸ்எஸ்ஒய் -இல் குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்யாவிட்டால், உங்கள் கணக்கு டீஃபால்ட் கணக்காக அறிவிக்கப்பட்டு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
FASTag KYC புதுப்பிப்பு (FASTag KYC Update)
ஃபாஸ்டாக் பயனர்களுக்கும் மார்ச் 31 தேதியும் முக்கியமானது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI பயனர்கள் Fastag இன் KYC விவரங்களை புதுப்பிக்க மார்ச் 31 வரை அவகாசம் அளித்துள்ளது. பயனர்கள் தங்கள் ஃபாஸ்டாக் நிறுவனத்தின் படி, நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷனின் இணையதளம் அல்லது இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்டின் போர்ட்டலுக்குச் சென்று தங்கள் ஃபாஸ்டாக்கின் KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம். இதைச் செய்யவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் உங்கள் Fastag கணக்கும் சாதனமும் செல்லாததாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குவோர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ