7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்

7th Pay Commission: அரியர் தொகை கிடைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசால் பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2023, 08:19 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.
  • இதன் கீழ் இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் தொகை கிடைக்கும்.
  • ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் அரசாங்கம் திருத்தம் செய்கிறது.
7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும் title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய பணியாளராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஊழியர்களுக்கு பல வித நல்ல செய்திகளை அளித்து வருகிறது. தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அரியர் தொகை கிடைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசால் பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் வரி விலக்கு பெறலாம். இந்த ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அரியர் தொகையில் எப்படி வரியைச் சேமிக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

7வது ஊதியக் குழுவில் வரிச் சலுகைகள் கிடைக்கும்

7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்கள், பிரிவு 89 -இன் கீழ் அரியர் தொகையில் வரி விலக்குப் பலனைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்கள் வரியில் விலக்கை கோர முடியும். வரி விலக்கு பெற, மின்-தாக்கல் தளத்தில் (ஈ-ஃபைலிங் போர்டல்) ஃபார்ம் 10E ஐ நிரப்ப வேண்டும்.

அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இதன் கீழ் இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் தொகை கிடைக்கும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் அரசாங்கம் திருத்தம் செய்கிறது. இம்முறையும் அரசாங்கம் அகவிலைபப்டியை 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால் இது 46 சதவிகிதமாக உயரும். அரசு ஊழியர்கள் இந்த அகவிலப்படியின் அரியர் தொகைக்கு வரி விலக்கு கோரலாம். அதேசமயம் அகவிலைபப்டியின் அரியர் தொகை ஊழியர்களின் கணக்கில் மாற்றப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பளம், ஓய்வூதியத்தில் பம்பர் ஏற்றம்

இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

மறுபுறம், நிபுணர்களின் கூற்றுப்படி, பிரிவு 89 இன் கீழ் கோரினால், நீங்கள் முதலில் படிவம் 10E ஐ நிரப்ப வேண்டும். இந்த படிவத்தில் க்ளெயிம் செய்யவில்லை என்றால், வருமான வரித்துறையின் நோடிசைப் பெறலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய ஊழியர்கள் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

நோட்டீசில் இந்த விஷயம் 

பிரிவு 89ன் கீழ் நிவாரணத்துக்கான சாத்தியம் இருப்பதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழியர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் படிவம் 10E இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

படிவம் 10E ஐ இப்படி சமர்ப்பிக்கவும்:

- இதற்கு முதலில் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

- இதற்குப் பிறகு, e-file என்ற விருப்பத்திற்குச் செல்லவும். அதில் வருமான வரி படிவம் என்ற விருப்பத்திற்குச் சென்று, File Income Tax Form என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது அங்கு 10E படிவம் இருக்கும். அதன் பின்னர் சப்மிட் பட்டனை கிளிக் செய்து ப்ரிவ்யூ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 

- இப்போது e-verify செய்ய Proceed என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு e-verification பக்கம் உங்கள் முன் திறக்கும்.

- இதற்குப் பிறகு, மின் சரிபார்ப்பு முடிந்ததும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும்.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்: பல அம்சங்களில் மாற்றம்... ஊதியத்தில் ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News