தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மூன்றே நாளில் இரட்டிப்பான நிலத்தின் மதிப்பு... அமராவதியில் அசுர வேகத்தில் எகிறும் ரியல் எஸ்டேட்

Land Prices Hike in Amaravati: ஜூன் 12 ஆம் தேதி அமராவதியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார். ஆனால், இதற்கு முன் இந்நகரில் நிலத்தின் விலை 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2024, 04:01 PM IST
  • தேர்தலுக்குப் பிறகு நிலத்தின் விலை அதிகரித்துள்ளது.
  • அமராவதி: நிலங்களின் விலை நிலவரம் என்ன?
  • இந்த பகுதிகளில் அதிக தேவை உள்ளது.
தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மூன்றே நாளில் இரட்டிப்பான நிலத்தின் மதிப்பு... அமராவதியில் அசுர வேகத்தில் எகிறும் ரியல் எஸ்டேட் title=

Land Prices Hike in Amaravati: சமீபத்தில் நடந்துமுடிந்த 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக தலைவர் நரேந்திர மோடி, நாளை மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பிரதமரையும் அவரது புதிய அமைச்சரவையையும் வரவேற்க இந்தியாவே காத்துக்கொண்டு இருக்கின்றது. பதவியேற்பு விழா ஜூன் 9 ஆம் தேதி, அதாவது நாளை நடைபெறும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்றது. இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது, நாட்டில் ஒரு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ​​

எண்டிஏ ஆட்சியில் டிடிபி தலைவர் சந்திரபாபு நாயுடு ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றுவார் என்று கூறினால் அது மிகையல்ல. இந்த அமைச்சரவையில் அவரது செல்வாக்கு பெரியதாக இருக்கும். இதன் காரணமாக, நாட்டில் மூன்றாவது முறையாக மோடி அரசு வந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் வருங்கால முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டுமல்லாமல், ஆந்திரா, அமராவதிக்கும் நல்ல நாட்கள் தொடங்விட்டது போல் தெரிகிறது. 

ஜூன் 12 ஆம் தேதி அமராவதியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார். ஆனால், இதற்கு முன் இந்நகரில் நிலத்தின் விலை 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆந்திராவின் பசுமைத் தலைநகராக அமராவதியை மேம்படுத்துவது குறித்து சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், இங்கு சொத்து விலை வேகமாக உயர்ந்துள்ளது. 

சந்திரபாபு நாயுடு 2014 முதல் 2019 வரை மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்போது சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக மாற்ற முன்மொழிந்தார். சுற்றுச்சூழல் பார்வையில் கிரீன்ஃபீல்ட் தலைநகர் அமராவதியை மேலும் வளமானதாக மாற்ற அவர் கனவு கண்டார். அமராவதி விஜயவாடா மற்றும் குண்டூர் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது 29 கிராமங்களை உள்ளடக்கியது.

தேர்தலுக்குப் பிறகு நிலத்தின் விலை அதிகரித்துள்ளது

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆந்திராவின் அமராவதி நகரில் ரியல் எஸ்டேட் விலை 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமராவதி நகரை தலைநகராக மேம்படுத்துவதில் சந்திரபாபு நாயுடு தொடக்கம் முதலே ஆர்வம் காட்டி வருவதால், வரும் நாட்களில் இந்த அறிவிப்பு வெளியானால், அமராவதிக்கு அதிக பலன் கிடைக்கும். இந்த சாத்தியக்கூறு காரணமாக, அமராவதியில் நிலம் மற்றும் சொத்து விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.

அமராவதி: நிலங்களின் விலை நிலவரம் என்ன?

சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது, ​​அமராவதியில் நிலத்தின் விலை ஒரு சதுர கெஜம் ரூ.40,000 ஆக உயர்ந்ததாகவும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் ஒரு சதுர கெஜம் ரூ. 13,000-14,000 ஆக வீழ்ச்சியடைந்ததாகவும் அங்குள்ள ரியல் எஸ்டேட் ஏஜண்டுகள் கூறுகிறார்கள். தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வருவதால், விலைகள், 20- 50% வரை ஏறும் என்றும் அதன் பிறகு 100% வரை உயரும் என்றும் கருத்து நிலவுகிறது. 

 மேலும் படிக்க | வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?

- 2019 ஆம் ஆண்டில், அமராவதியில் நிலத்தின் விலை: Rs. 25,000 - 60,000 per square yard.

- ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு அமைந்த பிறகு: Rs. 9000 - 18,000 per square yard.

- இப்போது, ​​சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில நாட்களில் நிலத்தின் விலை Rs. 30,000 - 60,000 per square yard வரை உயர்ந்துள்ளது.

இந்த பகுதிகளில் அதிக தேவை உள்ளது

அமராவதியில் கல்வி நிறுவனங்கள், உயர்நீதிமன்றம், விதானசவுதா, தலைமைச் செயலகம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு அருகில் நிலத்தின் தேவை அதிகமாக உள்ளது. சில்லறை வியாபாரிகள், தரகர்கள் மற்றும் விவசாயிகள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நிலம் வாங்குவதற்கான ஆர்டர்களைப் பெற்று வருகிறார்கள். 

ஜூன் 12-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் நகர விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அமராவதி குறித்து ஏதேனும் பெரிய அறிவிப்பு வெளியானால், இங்கு நிலத்தின் விலை மேலும் உயரும். முன்னதாக 2019ல், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி 3 தலைநகர் திட்டத்தை அறிவித்த பிறகு, அமராவதியில் நிலத்தின் விலை சரிந்தது. ஆனால் தற்போது அரசு மாற்றத்துடன் நிலைமையும் மாறி விட்டது. 

மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News