KVP: பணம் இரட்டிப்பாகும் உத்தரவாதம், 1000 ரூபாயிலும் துவக்கலாம்!!

கிசான் விகாஸ் பத்ர (KVP) என்பது அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2020, 07:07 PM IST
  • KVP-ல் தொகை இரட்டிப்பாவதற்கு உத்திரவாதம் உள்ளது.
  • இதில் எந்த வித ஆபத்தும் இல்லாமல் முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
  • தற்போதைய வட்டி விகிதத்தின்படி, முதலீடு இரட்டிப்பாக 124 மாதங்கள் ஆகும்.
KVP: பணம் இரட்டிப்பாகும் உத்தரவாதம், 1000 ரூபாயிலும் துவக்கலாம்!! title=

கிசான் விகாஸ் பத்ர: கிசான் விகாஸ் பத்ர (KVP) என்பது அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் தொகை இரட்டிப்பாவதற்கு உத்திரவாதம் உள்ளது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், இதில் எந்த வித ஆபத்தும் இல்லை. அதோடு உங்கள் முதலீடு (Investment) முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் மிகச் சிறந்தது. கிசான் விகாஸ் பத்ர நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் (Post Offices) பெரிய வங்கிகளிலும் (Banks) கிடைக்கிறது. அதன் மெச்யூரிடி அதாவது முதிர்வு காலம் இப்போது 124 மாதங்களாகும். இதில் குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.

50 ஆயிரம் ரூபாய் வரையிலான சர்டிஃபிகேட்

KVP-ல் ரூ .1000, ரூ .5000, ரூ 10,000 மற்றும் ரூ .50,000 வரை சர்டிஃபிகேட்டுகள் உள்ளன. அவற்றை வாங்கலாம்.

KVP –யின் வகைகள்

சிங்கிள் ஹோல்டர் சர்டிஃபிகேட்: ஒரு பெரியவர் அல்லது ஒரு சிறு வயதினருக்கானது

ஜாயிண்ட் A: இந்த ஜாயிண்ட் வகை இரண்டு பெரியவர்களுக்கானது. இது இருவருக்கும் அல்லது மெச்யூரிடி வரை உயிருடன் இருக்கும் நபருக்கு பயனளிக்கிறது.

ஜாயிண்ட் B: இந்த வகை, இரண்டு பெரியவர்களுக்கானது. இது இரண்டு நபர்களில் ஒருவருக்கு அல்லது முதிர்வு வரை உயிரோடிருக்கும் நபருக்கு அளிக்கப்படுகிறது.

வட்டி விகிதம் மற்றும் மெச்யூரிடி

KVP கணக்கின் கீழ், தற்போது, ​​ வட்டி விகிதம் ஆண்டுதோறும் 6.9 சதவீதமாக உள்ளது. இந்த திட்டம் பணத்தை இரட்டிப்பாக்க உத்தரவாதம் அளிக்கிறது. தற்போதைய வட்டி விகிதத்தின்படி, உங்கள் முதலீடு இரட்டிப்பாக 124 மாதங்கள் ஆகும். அதாவது, அதன் முதிர்வு காலம் இப்போது 124 மாதங்களாகும். கடந்த மார்ச் காலாண்டில், இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7 சதவீதமாக இருந்தது. இதில் 112 மாதங்களில் தொகை இரட்டிப்பாகியது. டிசம்பர் காலாண்டிலும் வட்டி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. இருப்பினும், 2019 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வட்டி 7.3 சதவீதமானது. இதில் பணம் இரட்டிப்பாக 118 மாதங்கள் எடுத்தன.

Account open செய்ய என்ன தேவை

KYC செயல்முறைக்காக அடையாள சான்று, முகவரி ஆதாரம் ஆகியவை தேவை.

இதற்கு ஆதார் கார்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் அளிக்கலாம். இது தவிர, KVP விண்ணப்ப படிவம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவை தேவை.

ALSO READ: வீட்டுத் திட்டத்தை மலிவாகக் கொண்டு வந்தது ICICI வங்கி, இனி வீட்டிலிருந்து பிளாட் பார்க்க முடியும்

அகௌண்டைத் திறப்பது எப்படி

• இதற்கு, அருகிலுள்ள ஏதாவது ஒரு தபால் நிலையத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து அகௌண்டைத் திறக்கலாம். இது தவிர, படிவத்தை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

• படிவத்தில் முழு பெயர், பிறந்த தேதி மற்றும் பரிந்துரைக்கப்பட்டவரின் முகவரி ஆகியவை எழுதப்பட வேண்டும்.

• வாங்கும் தொகையின் அளவு படிவத்தில் தெளிவாக எழுதப்பட வேண்டும்.

KVP படிவத்தின் தொகையை காசோலை மூலமோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தலாம்.

• காசோலை மூலமாக நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், படிவத்தில் காசோலை எண் தகவலை எழுதுங்கள்.

KVP சிங்கிள், ஜாயிண்ட் 'A' அல்லது ஜாயிண்ட் 'B' என நீங்கள் எந்த வகையில் வாங்குகிறீர்கள் என்று உங்கள் உறுப்பினர் வகையை படிவத்தில் விளக்குங்கள்.

• ஜாயிண்ட் வகையில் நீங்கள் இதை வாங்கினால், அதில் இரண்டு பயனாளிகளின் பெயர்களையும் எழுதுங்கள்.

• பயனாளி மைனராக இருந்தால், அவரது பிறந்த தேதி (DOB), பெற்றோரின் பெயர், பாதுகாவலரின் பெயர் ஆகியவற்றை எழுதுங்கள்.

• படிவத்தை சமர்ப்பித்தவுடன், பயனாளியின் பெயர், மெச்யூரிடி தேதி மற்றும் மெச்யூரிடி தொகையுடன் KVP அதாவது உழவர் மேம்பாட்டு சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும்.

ALSO READ: PPF, NSC, SCSS... தபால் நிலைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

Trending News