மத்திய அரசின் வீட்டு வசதி திட்டம்... ‘இதை’ செய்யவில்லை என்றால் மானியம் கிடைக்காது!

PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2023, 01:15 PM IST
  • மத்திய அரசால் செயல்படுத்தப்படும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
  • நபரின் வருமானம் மற்றும் வேறு சில தகுதி அடிப்படையில் அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கும் முறை.
மத்திய அரசின் வீட்டு வசதி திட்டம்...  ‘இதை’ செய்யவில்லை என்றால் மானியம் கிடைக்காது! title=

மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் உதவியுடன், மக்கள் நிதி உதவி, மானிய உதவி, ஊக்கத் தொகை, குறைந்த வட்டியில் கடன் என பலவேறு வகையில் உதவி பெற முடியும். இது தவிர, இலவச அல்லது மலிவான ரேஷன், ஓய்வூதியம், மருத்துவ பரிசோதனை, காப்பீடு போன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சில திட்டங்கள் உள்ளன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டமும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும். நீங்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைத்தால், அது தொடர்பான புதுப்பிப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் விண்ணப்பம்  நிராகரிக்கப்படலாம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் புதிய அப்டேட்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் வீட்டு வசதி திட்டத்தின் பலன்களைப் பெறுவது பற்றியோசிக்கிறீர்களா? ஆம் எனில், இப்போது நிலப் பதிவேடு இல்லாமல் நீங்கள் திட்டத்தின் பலன்களைப் பெற மாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். அதாவது பிரதமரின் வீட்டி வசதி திட்டத்தின் பலனைப் பெற நீங்கள் விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் நிலத்தை பதிவு செய்யுங்கள்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் திட்டத்திற்கு தகுதியுடையவரா இல்லையா என்பதை நினைவில் கொள்ளவும். இல்லையெனில், உங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும், மேலும் உங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்படலாம். முதலில் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana Eligibility) கீழ், பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதன் பின்னரே பயனாளிகளுக்கு பணம் ஒதுக்கப்படுகிறது.

PM ஆவாஸ் யோஜனா தகுதிபெறாதவர்கள்

1. வீட்டில் உள்ள ஒருவர் அரசு வேலை செய்தால் அவருக்கு அந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

2. இரண்டரை ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்காது.

3. அதிக நிலத்துடன் லேண்ட்லைன் இணைப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி இருந்தால், உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

4. மோட்டார் சைக்கிள், இரு சக்கர வாகனம் அல்லது மூன்று வாகன உரிமையாளர்களுக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

5. 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள கிசான் கார்டு உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: அதிகரிக்கும் டிஏ, ஃபிட்மெண்ட் ஃபாக்டர்...உயரும் சம்பளம்

PM ஆவாஸ் யோஜனாவிற்கு விண்ணப்பிக்கும் முறை (How to apply for PM Awas Yojana )  

1. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்த்திற்கும் செல்லவும்

2. இங்கே நீங்கள் மெனு டேப்பில் கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு குடிமக்கள் மதிப்பீடு விருப்பத்தை கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு ஆதார் எண்ணை உள்ளிடவும்.

4. இதற்குப் பிறகு நீங்கள் நேரடியாக விண்ணப்பப் பக்கத்தை அடைவீர்கள்.

5. இங்கே கேட்கப்பட்ட தகவலை நிரப்பவும்.

6. தகவலை உறுதிசெய்த பிறகு தொடரவும், இங்கே நீங்கள் விண்ணப்ப எண்ணைப் பெறுவீர்கள்.

7. இதற்குப் பிறகு விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்யவும்.

8. இந்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் விரும்பினால், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் விண்ணப்பப் படிவத்தை எந்த நிதி நிறுவனத்திலும் சமர்ப்பிக்கலாம்.

ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அரசின் வறுமை ஒழிப்பு  திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும். இந்தியாவின் சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தியுள்ளன. இதில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | அறிவிக்கப்படாத கட்டண வசூல்! வெட்ட வெளிச்சமான Google payஇன் தகிடுதத்தங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News