கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) தனது 44.51 கோடி வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், சேமிப்பு கணக்கு பராமரிப்பதற்கு சராசரி மாத இருப்பு (AMB) தேவையில்லை என அறிவித்தது.
சராசரி மாத இருப்பு (AMB) பராமரிப்பைத் தள்ளுபடி செய்து ஆச்சரியப்படுத்திய வங்கி, இந்த முடிவின் மூலம், அனைத்து SB வாடிக்கையாளர்களும் தங்கள் சேமிப்பு வங்கி கணக்குகளில் இனி ஜீரோ இருப்பு வசதியை அனுபவிக்க முடியும் எனவும் அறிவித்துள்ளது. முன்னதாக, அவர்கள் முறையே மெட்ரோ, அரை நகர மற்றும் கிராமப்புறங்களில் முறையே ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 ரூபாய்களை பராமரிக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் SBI சராசரி மாத இருப்பை பராமரிக்காதவர்களுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை வரி விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
தற்போது SBI தனது AMB பராமரிப்பைத் தள்ளுபடி செய்துள்ள நிலையிலும், பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி நிலுவைத் தொகையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் HDFC வங்கி, ICICI வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவற்றில் பராமரிக்க வேண்டிய AMB தொகை என்ன என்பதை நாம் தொகுக்க முயன்றுள்ளோம்.
HDFC வங்கி சராசரி மாத இருப்பு
- HDFC வங்கி மெட்ரோ / நகர கிளைகள்: ரூ.10,000
- HDFC வங்கி அரை நகர கிளைகள்: ரூ.5,000
- HDFC வங்கி கிராமப்புற கிளைகள்: சராசரி காலாண்டு இருப்பு ரூ.2,500 அல்லது நிலையான வைப்பு ரூ.10,000 பராமரிக்க வேண்டும்.
ICICI வங்கி சராசரி மாத இருப்பு
- ICICI வங்கி மெட்ரோ மற்றும் நகர இடங்களில் - ரூ.10,000
- ICICI வங்கி அரை நகர்ப்புற இடங்களில் - ரூ.5,000
- ICICI வங்கி கிராமப்புற இடங்கள் - ரூ.2,000
- ICICI வங்கி கிராமின் இடங்கள் - ரூ.1,000
ICICI வங்கி AMB கட்டணங்களை பராமரிக்காத நிலையில் விதிக்கப்படும் அபராதம்
மெட்ரோ / நகர்ப்புற / அரை நகர / கிராமப்புற இடங்கள்: தேவையான AMB-ன் பற்றாக்குறையின் போது ரூ.100 + 5% வரி வசூளிக்கப்படும்.
கிராமின் இருப்பிடங்கள்: தேவையான AMB-ன் பற்றாக்குறையின் போது 5% வரி வசூளிக்கப்படும்.
Axis வங்கி சராசரி மாத இருப்பு
- Axis வங்கி மெட்ரோ / நகர்ப்புறம் - ரூ. 10,000,
- Axis வங்கி அரை நகர - ரூ. 5,000,
- Axis வங்கி கிராமப்புறம் - ரூ. 2,500
பஞ்சாப் தேசிய வங்கி சராசரி மாத இருப்பு
- PNB கிராமிய வங்கி -ரூ .1000
- PNB அரை நகர்ப்புற வங்கி -ரூ .2000
- PNB நகர்ப்புற வங்கி -ரூ .2000
- PNB பெருநகர வங்கி - ரூ .2000