7வது ஆண்டை கொண்டாடும் ஜியோ.. இலவச டேட்டாக்களை அள்ளி வீசிய நிறுவனம்

Reliance Jio Offering Many Benefits: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 7 வயதை எட்டியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் சலுகை மற்றும் கூப்பன்களை வழங்குகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 5, 2023, 08:10 PM IST
7வது ஆண்டை கொண்டாடும் ஜியோ.. இலவச டேட்டாக்களை அள்ளி வீசிய நிறுவனம் title=

ஜியோ இலவச டேட்டா திட்டம்: இந்திய டெலிகாம் துறையில் கிங் ஆக இருக்கும் ஜியோ நிறுவனத்தின் 7வது ஆண்டு நிறைவையொட்டி, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சில ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா மற்றும் கூடுதல் கூப்பன்களை வழங்குகிறது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கூடுதல் டேட்டா மற்றும் கூப்பன்களை வழங்குகிறது. ஜியோ நிறுவனத்தின் இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். ஜியோ நிறுவனம் தற்போதுள்ள ரூ.299, ரூ.749 மற்றும் ரூ.2999 ஆகிய மூன்று திட்டங்களில் இந்த சிறப்பு சலுகையை வழங்குகிறது. அதைக்குறித்து பார்ப்போம்.

ரூ.299 திட்டம்
ஜியோவின் இந்த ரூ.299 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இதில், வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டா வசதியைப் பெறுகிறார்கள், அதாவது இதில், வாடிக்கையாளர்கள் மொத்தம் 56 ஜிபி டேட்டா வசதியைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். இத்துடன் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனுடன், ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 7 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் படிக்க - Netflix இல் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்

ரூ.749 திட்டம்
இந்த திட்டத்தின் விலை ரூ.749. ஜியோவின் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா வசதி உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 180 ஜிபி டேட்டா வசதி உள்ளது. இதில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் உள்ளது, அத்துடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தை நீங்கள் வாங்க விரும்பினால் சிறப்பு சிலையாக 14 ஜிபி கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் படிக்க - நெட்ஃபிளிக்ஸ் இருக்கும் சிறந்த 10 திகில் திரைப்படங்கள்

ரூ 2999 திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ 2999. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2.5 ஜிபி தினசரி டேட்டா வீதம் மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுகிறார்கள். ஜியோவின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெற முடியும். இதனுடன், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 21 ஜிபி கூடுதல் வழங்கப்படும். மேலும் ரூ.200 ஆஃபர், ஸ்விக்கயில் ரூபாய் 100 தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்குகிறது. முழு விவரத்தை அறிய ஜியோ இணையத்தளத்தில் பார்க்கவும்.

மேலும் படிக்க - சாட்ஜிபிடிக்கு போட்டியாக ஏஐ உருவாக்கும் ஜியோ - அம்பானியின் பலே பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News