ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தகவலை அளித்தார் மத்திய அமைச்சர்

Jan Dhan Account: பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2022, 10:51 AM IST
  • 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஆன்லைனில் திறப்பு.
  • 75 டிபியூ நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டன.
  • 50 கோடி ஜன்தன் கணக்குகளில் பாதி பெண்களின் கணக்குகள்.
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தகவலை அளித்தார் மத்திய அமைச்சர் title=

ஆன்லைனில் ஜன்தன் கணக்கைத் திறப்பது எப்படி: உங்களிடம் ஜன்தன் கணக்கு இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இத்திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடமிருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஆன்லைனில் திறப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் கீழ், இந்த கணக்குகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி அனுப்பப்படுவதாக கூறினார். இந்த 50 கோடி ஜன்தன் கணக்குகளில் பாதி பெண்களின் கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.1.75 லட்சம் கோடி

‘ஜன்தன் கணக்கு தொடங்கும் போது, ​​நம் நாட்டில் இது தேவையா என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர். இன்று ஜன்தன் கணக்குகள் மூலம் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களுக்காக 25 லட்சம் கோடி ரூபாயை விநியோகித்துள்ளோம். இது ஒரு சாதனை.’ என்று அமைச்சர் ரெட்டி கூறினார். இன்று ஏழைகளின் ஜன்தன் வங்கிக் கணக்குளில் ரூ.1.75 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | டிக்கெட் கட்டணம் உயர்வு, தீபாவளிக்கு முன் மக்களுக்கு ரயில்வே தந்த அதிர்ச்சி 

75 டிபியூ நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டன

முன்னதாக கர்நாடக வங்கியின் இரண்டு டிஜிட்டல் பேங்கிங் யூனிட்கள் (DBUs) செயல்படத் தொடங்கின. பல்வேறு வங்கிகளின் 75 டிபியுக்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடக வங்கியின் இந்த இரண்டு டிபியுக்களும் இதில் அடங்கும். DBU-கள் திறமையான, காகிதமற்ற, பாதுகாப்பான, இணைக்கப்பட்ட சூழலில் செயல்படும். அங்கு அவை வாடிக்கையாளர்களுக்கு வங்கிப் பொருட்கள் மற்றும் சேவைகளை சுய சேவை மற்றும் உதவி (டிஜிட்டல்) முறையில் வழங்கும்.

இது தவிர, DBU கள் அந்தந்த மாவட்டத்தில் நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் வங்கி கல்வியறிவை ஊக்குவிக்கும். வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் (CEO) தலைவருமான எம்.எஸ்.மஹாபலேஷ்வர் ஒரு விழாவில், ‘இரண்டு டிபியூக்களை திறக்க வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது. வங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது சிறப்பான கவுரவமாகும்’ என்று கூறினார். 

மேலும் படிக்க | மின் கட்டண எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மானியமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News