வருமான வரி விதி 132 மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் (CBDT) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரிவு 155(18) வருமானத்தின் மறு கணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தை மீண்டும் கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இந்த விதி வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி தொடர்பான விதிகள் தெளிவாக உள்ளன. ஆனால் அதன் மீது செலுத்தப்படும் செஸ் அல்லது கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பிரிவு 155 இல் திருத்தம் செய்யப்படும் வரை, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது. இதனை கழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த கோரிக்கையானது துணைப்பிரிவு 18 உடன் பிரிவு 155 உடன் சேர்ப்பதன் மூலம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. 29 செப்டம்பர் 2022 அன்று, CBDT ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மதிப்பீட்டாளர் சர் சார்ஜை திரும்ப கோர அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
வரி செலுத்துவோர் மீது ஏற்படுத்தும் தாக்கம்
வருமானத்தை கணக்கிடும் போது கூடுதல் கட்டணத்தில் கழித்தல் அல்லது திரும்ப கோருதல் அனுமதிக்கப்படாது என்பது இந்த விதியிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், இதற்கான விலக்குடன் வருமானத்தை அறிவித்தவர்கள் கணக்கீட்டின் போது மீண்டும் வரி செலுத்த வேண்டும். மேலும், குறைந்த வருமானத்தில் செலுத்த வேண்டிய வரியில் பாதியை அபராதமாக செலுத்த வேண்டும்.
மதிப்பீட்டாளருக்கு நிவாரணம்
விதி 132 இன் படி மதிப்பீட்டாளர்களுக்கு இது நிவாரணமாக இருக்கும். மீண்டும் கணக்கிடுவதற்கு படிவம் எண் 69ஐ 31 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் வருமானம் மீண்டும் கணக்கிடப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும். வரியைச் செலுத்திய பிறகு, மதிப்பீட்டாளர் படிவம் எண். 70ல் கட்டணம் செலுத்திய விவரங்களை மதிப்பீட்டு அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Income Tax Return: படிவம்-16 இல்லாவிட்டாலும் ITR தாக்கல் செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ