மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்

Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 22, 2024, 11:42 AM IST
  • கூடுதல் விவரங்களை https://www.irctctourism.com/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
  • பக்தர்களுக்கு இந்த டூர் பேக்கேஜ் பயனுள்ளதாக இருக்கும்.
  • ஐஆர்சிடிசி கோவிந்தம் டூர் பேக்கேஜ்.
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ் title=

Tirupati Tour Package: இந்திய ரயில்வே அவ்வப்போது நாட்டின் புகழ்பெற்ற மதத் தலங்கள் மற்றும் புனிதத் தலங்களுக்கான சுற்றுலா பயணத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கோவில்களுக்கு சென்று வர முடியும். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு ஸ்பெஷல் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி வழங்குகிறது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம். 

டெல்லியில் இருந்து திருப்பதிக்கு டூர் பேக்கேஜ் | Tirupati Tour Packages From Delhi:
* இந்த டூர் பேக்கேஜானது ஏப்ரல் 27  ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
* டூர் பேக்கேஜ் 1 இரவு மற்றும் 2 பகல்களுக்கானது.
* இந்த டூர் பேக்கேஜ் விமானம் மூலம் இருக்கும். 
* பேக்கேஜ் கட்டணம்- நீங்கள் தனியாக பயணம் செய்தால் ரூ.21,020 கட்டணம் செலுத்த வேண்டும்.
* இருவருடன் பயணம் செய்தால் ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணமாக ரூ.19,170 செலுத்த வேண்டியிருக்கும்.
* குழந்தைகளுக்கு தனியாக செல்ல ரூ.16,260 கட்டணம் செலுத்த வேண்டும்.
* திருப்பதி வெங்கடாஜலபதியின் தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் இந்த பேக்கேஜில் இருக்கும்.

மேலும் படிக்க | SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!!

அதேபோல் ஏப்ரல் 29 ஆம் தேதி ரயில் மூலம் மற்றொரு டூர் பேக்கேஜ் ஒன்று உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பெயர் கோவிந்தம் (GOVINDAM) ஆகும். மேலும் இதில் உங்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். அதனுடன் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதில் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் (Special Entry Darshan at Tirumala) தரப்படும். ஒரு கைட் வழங்கப்படும். அத்துடன் பயணக் காப்பீடும் வழங்கப்படும். 

கட்டணம் எவ்வளவு?
ஐஆர்சிடிசி கோவிந்தம் டூர் பேக்கேஜை மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 5660 ரூபாய் ஆகும், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 5660 ரூபாய் ஆகும். மேலும் ஒருவர் மட்டும் செல்ல 6790 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் ஸ்லீப்பர் வகுப்பிற்கு, மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 3800 ரூபாய் ஆகும், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 3800 ரூபாய் ஆகும். மேலும் ஒருவர் மட்டும் செல்ல 4940 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 

Category

Single Sharing

Twin Sharing

Triple Sharing

Child With Bed

(5-11 yrs)

Child Without

Bed (5-11 yrs)

Comfort (3A)

₹ 6790/-

₹ 5660/-

₹ 5660/-

₹ 4750/-

₹ 4750/-

Standard (SL)

₹ 4940/-

₹ 3800/-

₹ 3800/-

₹ 2890/-

₹ 2890/-

 

 

 

 

 

கூடுதல் விவரங்கள்:
இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.irctctourism.com/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து விடுமுறைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த டூர் பேக்கேஜ் பயனுள்ளதாக இருக்கும். அதோடு அலைச்சல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

மேலும் படிக்க | வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News