Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!

 Indian Railways Offer Affordable Meals Rs 20 For General Class Passengers: இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2024, 02:46 PM IST
  • 2023ஆம் ஆண்டில் சுமார் 51 நிலையங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
  • முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்துள்ள இந்திய ரயில்வே.
Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்! title=

 Indian Railways Offer Affordable Meals Rs 20 For General Class Passengers: இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 

ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க இந்திய ரயில்வே (Indian Railways) தனது புதிய திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கோடை சீசனில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்துள்ள இந்திய ரயில்வே அவர்களுக்கு பட்ஜெட் விலையில் உணவு வழங்க ரயில்வே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மலிவு விலை உணவு மற்றும் தண்ணீர் பிளாட்பாரங்களில் பொது வகுப்பு பெட்டிகளுக்கு அருகில் உள்ள கவுண்டர்களில் கிடைக்கும். "பயணிகள் தங்களுடைய குளிர்பானங்களை நேரடியாக இந்த கவுன்டர்களில் இருந்து வாங்கலாம், உணவு எங்கே கிடைக்கும் என்று தேடுவது அல்லது நிலையத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது," என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விளக்கினார்.

இந்தச் சேவையானது 2023ஆம் ஆண்டில் சுமார் 51 நிலையங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததன் காரணமாக, தற்போது 100 கூடுதல் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. மொத்த உணவு கவுன்டர்களின் எண்ணிக்கையை தோராயமாக 150 ஆகக் கொண்டு, திட்டம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

இந்திய இரயில்வேயின் முன்முயற்சி மேலும் மேம்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் இன்னும் பல நிலையங்களில், மலிவு விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது. 

மலிவு விலை உணவு திட்டத்துடன் கூடவே, கோடை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய ரயில்களின் எண்ணிக்கையையும் ரயில்வே அதிகரித்து வருகிறது. பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 9111 சிறப்பு ரயில் சேவைகள் கிடைக்கும்.

 2023ம் ஆண்டு கோடையுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மொத்தம் 6369 கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இது பயணிகளின் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது," என்று ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News