இந்திய ரயில்வே விதிகள்... ‘இந்த’ தப்பை செஞ்சுடாதீங்க... கம்பி எண்ண வேண்டி வரும்!

ரயிலில் பயணம் செய்பவர் என்றால், ரயில்வேயின் விதிகளை பற்றி நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில், தகவல் தெரியாத நிலையில், செய்யக்கூடாத விஷயம் ஏதேனும் செய்தால், சிறைக்கு செல்ல நேரிடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2023, 12:21 PM IST
  • ரயில்வே விதிகளின் படி இருக்கைகளை மாற்றுவது சட்டப்படி குற்றம்.
  • பலர் ரயில்வே பயணத்தை மிகவும் வசதியாகவும் சிக்கனமாகவும் கருதுகின்றனர்.
  • ரயில்வே விதிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லது.
இந்திய ரயில்வே விதிகள்... ‘இந்த’ தப்பை செஞ்சுடாதீங்க... கம்பி எண்ண வேண்டி வரும்! title=

இந்திய ரயில்வே விதிகள்: நாட்டின் மூலை முடுக்குகளை இணைக்கும் ஒரு போக்குவரத்து ரயில்வே என்றால் மிகையில்லை. நம்மில்  ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். பெரும்பாலானோர் விரும்பும் போக்குவரத்தாக ரயில்வே உள்ளது . இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பலர் ரயில்வே பயணத்தை மிகவும் வசதியாகவும் சிக்கனமாகவும் கருதுகின்றனர்.  ரயிலில் பயணம் செய்பவர் என்றால், ரயில்வேயின் விதிகளை பற்றி நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில், தகவல் தெரியாத நிலையில், செய்யக்கூடாத விஷயம் ஏதேனும் செய்தால், சிறைக்கு செல்ல நேரிடும். எனவே விதிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லது.

 நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் ரயில் இருக்கைகளை ஒன்றாக முன்பதிவு செய்ய விரும்புவீர்கள் இல்லையா... ஆனால் எப்போதும் அப்படி அமைந்து விடும் என சொல்ல முடியாது.  உங்களுக்கு வெவ்வேறு பெட்டிகளில் ரயில் இருக்கைகளை முன்பதிவு கிடைத்தாலோ அல்லது பரஸ்பரம் ஒன்றாக பயணம் செய்யும் வகையில் இருக்கைகளைப் பெற முடியாமலோ இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?  பொதுவாக நாம் இருக்கைகளை மாற்றிக் கொள்ளவே நினைப்போம். ஆனால், கவனமாக இருங்கள்! ஏனெனில் ரயில்வே விதிகளின்படி (Indian Railways) இது சட்டப்படி குற்றமாகும். இதற்காக நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

ரயில்வே விதி : இருக்கைகளை மாற்றுவது சட்டப்படி குற்றம்

ரயில்வே விதிகளின்படி, ஒருவருடன் இருக்கைகளை மாற்றுவது சட்டப்படி குற்றம். அதேசமயம், உங்கள் இருக்கையை விட்டுவிட்டு மற்றொரு இருக்கை அல்லது பெட்டியில் பயணம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதற்கு ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!

வெயிடிங் லிஸ்ட்  டிக்கெட்டில் பயணம் செய்வது குற்றம்

வெயிடிங் லிஸ்ட்   டிக்கெட்டில் பயணம் செய்வதும் குற்றமாக கருதப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ அல்லது ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ, 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். TTE உங்களிடமிருந்து கட்டணத்தையும் வசூலிக்கலாம். நீங்கள் விரும்பினால், அடுத்த நிலையத்திலும் உங்களை இறக்கிவிடலாம்.

டிக்கெட் விற்பதும் சட்டப்படி குற்றம்

நீங்கள் உங்கள் ரயில் டிக்கெட்டை பிளாக்கில் பிறருக்கு விற்றாலோ அல்லது வேறு ஒருவருக்கு உங்கள் டிக்கெட்டைக் கொடுத்தாலோ, அது சட்டப்பூர்வ குற்றமாக கருதப்படுகிறது. ரயில் டிக்கெட்டுகள் ரயில்வே மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன. அனுமதியின்றி டிக்கெட் விற்றால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். 

பேண்ட்ரி கார் பெட்டியில் பயணம்

ரயிலில்  உணவு பொருட்கள் தயாரிக்கப்படும் பேண்ட்ரி கோச் பேண்ட்ரி கார் என்றும் அழைக்கப்படுகிறது. ரயிலின் பேண்ட்ரி காரில் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டனையாக சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படுகிறது. உங்களின்  ஏதேனும் தேவைக்கு, அல்லது பொருட்களை வாங்க, நீங்கள் பேண்ட்ரி பெட்டிக்குள் செல்லலாம். ஆனால் அதில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரயில்வே வளாகத்தில் பொருட்களை விற்பனை

இது தவிர, யாரேனும் யாருடைய அனுமதியும் இன்றி, ரயில்வே வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்தால், அது சட்டப்படி குற்றமாக கருதப்படும். இதை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ரயில்வேயின் 144வது பிரிவின் கீழ், இந்த விதிகளை மீறுபவர்களுக்கு சிறையுடன் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். அனுமதியின்றி பொருட்களை விற்ற குற்றவாளிக்கு 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

மேலும் படிக்க |  தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

மேலும் படிக்க | குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News