இந்திய ரயில்வே போக்குவரத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. தினம் கோடிக்கணக்கானோர் இதில் பயணிக்கின்றனர். நாட்டில் மூலை முடுக்குகளை இணைக்கும் ரயில்வே உலகில் பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் பயணிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கன்பர்ம் டிக்கெட் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என்பதை நீங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்க கூடும். இருப்பினும், ஐஆர்சிடிசியின் ரீஃபண்ட் விதி என்ன என்பது பலர் மனதில் இருக்கும் கேள்வி. சில சூழ்நிலைகளில், சார்ட் தயாரித்த பிறகு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தாலும், உங்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன?
உண்மையில், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே (Indian Railways), மூலம் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல நேரங்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பணத்தை திரும்பப் பெறுவதற்கு டிடிஆர் அதாவது டிக்கெட் டெபாசிட் ரசீதை தாக்கல் செய்யும் வசதி பயணிகளுக்கு உள்ளது. இருப்பினும், முழுப் பணத்தையும் திரும்பப் பெற, டிக்கெட்டை ரத்து செய்ததற்கான காரணம் முக்கியமானது.
IRCTC இணையதளத்தில் TDRஐ எவ்வாறு தாக்கல் செய்வது
1. முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.irctc.co.in/nget/train) செல்ல வேண்டும்.
2. இப்போது நீங்கள் இந்த இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
3. புக் டிக்கெட் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
4. இனி இங்கிருந்து டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
5. இப்போது நீங்கள் சேவை தாவலில் உள்ள டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR ) சம்பர்பிக்கும் பகுதிக்கு வர வேண்டும்.
6. புதிய வலைப்பக்கம் திறக்கும் போது, My Transactions தாவலில் உள்ள File TDRஐ கிளிக் செய்ய வேண்டும்.
7. கோரிக்கையை பதிவு செய்த பிறகு, TDR ஐ தாக்கல் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்
IRCTC Rail Connect செயலியில் TDRஐ எவ்வாறு தாக்கல் செய்வது
1. முதலில் நீங்கள் IRCTC Rail Connect செயலியைத் திறக்க வேண்டும்.
2. இப்போது நீங்கள் செயலியில் உள்நுழைய வேண்டும்.
3. இப்போது நீங்கள் நீங்கள் பயணம் செய்ய இருந்த ரயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. இப்போது நீங்கள் My Bookings என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது நீங்கள் ரத்து செய்ய விரும்பும் ரயில் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து அதைக் கிளிக் செய்யவும்.
6. இப்போது நீங்கள் மூன்று புள்ளிகள் மெனு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. மேல் வலதுபுறத்தில் உள்ள ரத்து (Cancel) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
8. ரத்துசெய்த பிறகு, நீங்கள் ரயில் பக்கத்தின் பிரதான டாஷ்போர்டுக்குத் திரும்ப வேண்டும்.
9. இங்கே நீங்கள் 'File TDR' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
10. ரயில் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, TDR கோரிக்கையை தாக்கல் செய்வதற்கான காரணத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.
11. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்ததற்கான காரணத்தை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ