பல சாதனைகளை தொடர்ந்து செய்துவரும் இந்தியன் ரயில்வே! அதிக லாபம் ஈட்டி புதிய சாதனை...

Indian Railways Profit In 2023-24: மகிழ்ச்சி தரும் செய்தியாக, இந்திய ரயில்வே தொடர்ந்து இதுபோன்ற பல மைல்கற்களை கடந்து சாதனை படைத்து வருகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2024, 03:43 PM IST
  • இந்திய ரயில்வேயின் பல புதிய சாதனைகள்
  • சரக்கு கையாளுதல் அதிகரிப்பு
  • பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது
பல சாதனைகளை தொடர்ந்து செய்துவரும் இந்தியன் ரயில்வே! அதிக லாபம் ஈட்டி புதிய சாதனை... title=

Indian Railways Profit : கடந்த ஆண்டை விட ரயில்வேயின் வருவாய் 17,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வேத்துறை 2023-24 நிதியாண்டில், இதுவரை ரூ.2.40 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இது இந்திய ரயில்வேயின் கடந்த ஆண்டு மொத்த வருவாயான ரூ.2.23 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும்.

மகிழ்ச்சி தரும் செய்தியாக, இந்திய ரயில்வே தொடர்ந்து இதுபோன்ற பல மைல்கற்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 2023-24 நிதியாண்டில் சரக்கு வணிகம், மொத்த வருவாய், பாதை அமைப்பது போன்றவற்றில் ரயில்வே தனது வரலாற்றில் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது இந்தியன் ரயில்வே என்பது குறிப்பிடத்தகக்து.  
 
2023-24 நிதியாண்டில், இதுவரை இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.2.40 லட்சம் கோடி ஆக பதிவாகியிருக்கும் நிலையில் இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி மொத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ரயில்வே ஈட்டியிருந்தது. 17,000 கோடி ரூபய் அளவிற்கு லாபம் அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த செலவு ரூ.2.26 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Credit Card: கிரெடிட் கார்ட் பயனர்கள் கவனத்திற்கு! இந்த தவறுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்!

1500 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது இந்தியன் ரயில்வே

ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட தரவுகளின்படி, இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து எண்ணிக்கையான 1,500 மில்லியன் டன்களை கடந்துள்ளது. முன்னதாக, இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் 1,512 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

52 கோடி பயணிகள் பயணம் செய்தனர்

ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டில் பயணித்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை 648 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் புள்ளிவிவரங்களை விட 52 கோடி அதிகம் என்பது குறிபிடத்தக்கது.

கடந்த ஆண்டு பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 596 கோடி. நடப்பு நிதியாண்டில் இதுவரை 5,100 கிலோமீட்டர் புதிய பாதை இந்திய ரயில்வேயால் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் சராசரி தினசரி டிராக் ஒரு நாளைக்கு 14 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.

காரணம் என்ன?

இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியதாக இருப்பதால், ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். விமானம் டாக்ஸி போன்ற போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு வசதியாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். பிற போக்குவரத்துக்களுடன் ஒப்பிடும்போது ரயில் பயணத்திற்கான கட்டணம் குறைவு, ரயில் சேவைகளும் அதிகம், அதேபோல் மக்கள் ரயில்களில் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்கலாம் என்பதால் பிற போக்குவரத்துக்களை விட ரயில் போக்குவரத்து இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாதனமாக உள்ளது.

மேலும் படிக்க | Sukanya Samriddhi Yojana: செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News