டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்

Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2024, 10:02 AM IST
  • படுக்கையுடன் ரூ.7,650 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.7,400 கட்டணம் வசூலிக்கப்படும்.
  • டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
  • டூர் பேக்கேஜ் மூலம் வைஷ்ணோ தேவியை தரிசிக்கும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.
டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ் title=

Vaishno Devi IRCTC Tour Package : இந்திய ரயில்வே நிறுவனமான IRCTC, அவ்வப்போது பல மத ஸ்தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த தொடரில், ஐஆர்சிடிசி தற்போது வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜை பக்தர்களுக்காக கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜானது வாரணாசியில் இருந்து தொடங்கும்.  அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜ் 4 இரவுகள் மற்றும் 5 பகல்களுக்கானது.

இந்த டூர் பேக்கேஜ் குறித்து ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) கூறுவதாவது, இந்த டூர் பேக்கேஜ் மூலம் வைஷ்ணோ தேவியை தரிசிக்கும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். மேலும் இந்த டூர் பேக்கேஜில் (IRCTC Tour Package), மூன்றாம் வகை ஏசியில் பயணிக்க வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் உணவு மற்றும் பானங்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் 2 காலை உணவு மற்றும் 2 இரவு உணவுக்கான வசதியைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Summer Special Trains: மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்:
டூர் பேக்கேஜ் பெயர் – Mata Vaishno Devi Ex Varanasi (NLR022)
சுற்றுப்பயணம் எத்தனை நாட்கள் நீடிக்கும் - 4 இரவுகள் மற்றும் 5 பகல்கள்
புறப்படும் தேதி - ஒவ்வொரு வியாழக்கிழமை
உணவுத் திட்டம் - காலை உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும்
ரயில் எண் – 12237/12238
பயண முறை - ரயில்
வகுப்பு - மூன்றாம் ஏசி (Third AC)
போர்டிங்/டிபோர்டிங் நிலையங்கள்- வாரணாசி, ஜான்பூர் நகரம், சுல்தான்பூர், லக்னோ மற்றும் ஷாஜஹான்பூர்.

டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
இந்த டூர் பேக்கேஜிற்கான கட்டணமானது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு ஏற்ப வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நபருக்கு சுமார் ரூ.9 ஆயிரத்தில் இருந்து பேக்கேஜ் தொடங்கும். டிரிபிள் ஆக்கிரமிப்பில் ஒரு நபருக்கு ரூ.8,650 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இரட்டை ஆக்கிரமிப்பில் ஒரு நபருக்கு ரூ.9,810 கட்டண ஆகும். அதேசமயம், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, படுக்கையுடன் ரூ.7,650 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.7,400 கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்பதிவு செய்வது எப்படி
ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்தத் டூர் பேக்கேஜிற்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, 8287930908 / 8287930909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | Online Shopping: ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News