ரயில்வே வழங்கிய புதிய அப்டேட்.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

Railways Tour Package:  இந்த முறை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு மத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், ரயில்வே உங்களுக்காக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 24, 2023, 03:11 PM IST
  • இந்த டூர் பேக்கேஜ் 4 இரவுகள்/5 பகல்கள் இருக்கும்.
  • திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்கலாம்.
  • ஹோட்டலில் தங்குவதற்கான வசதி கிடைக்கும்.
ரயில்வே வழங்கிய புதிய அப்டேட்.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: வரவிருக்கும் நாட்களில் நீங்கள் ஒரு மதப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுகிறீர்கள் என்றால், ரயில்வே உங்களுக்காக ஒரு சிறப்பு டூர்  பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது, இதில் நீங்கள் ஷீரடியுடன் சேர்ந்து திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த பேக்கேஜிற்கு நீங்கள் வெறும் 14000 ரூபாய்க்கு செலுத்தி பயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி, டூர் செல்லும் நீங்கள் தங்குவதற்கும், உண்பதற்கும் தனியாக பணம் அதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. வாருங்கள் ஐஆர்சிடிசி இன் இந்த அசத்தலான டூர் பேக்கேஜ் குறித்து விரிவான தகவலை இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

IRCTC ட்வீட் செய்துள்ளது:
முன்னெப்போதும் இல்லாத ஆன்மீக பயணத்தை அனுபவியுங்கள் என்று IRCTC அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது! இந்த ஐந்து நாட்களின் பேக்கேஜில், ஷீரடி உட்பட பல மதக் கோயில்களை நீங்கள் பார்வையிடலாம். இதில், சப்பீரோ ரிசார்ட் அல்லது இந்த வகை ஹோட்டலில் மட்டுமே தங்குவதற்கான வசதி கிடைக்கும்.

மேலும் படிக்க | ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன? உடனே படிக்கவும்

இந்த இடங்களுக்கு தரிசனம்:
இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் சனி சிங்கனாபூர், ஷீரடி மற்றும் திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்கலாம்.

போர்டிங்-டிபோர்டிங் பாயிண்ட்: 
லக்னோ ஜங்ஷன் மற்றும் கான்பூர் சென்ட்ரல்

இந்த டூர் பேக்கேஜ் எத்தனை நாட்களுக்கு:
இந்த டூர் பேக்கேஜ் 4 இரவுகள்/5 பகல்கள் இருக்கும்

டூர் பேக்கேஜின் கட்டணம் எவ்வளவு?
இந்த டூர் பேக்கேஜின் விலையைப் பற்றி பேசுகையில், செகண்ட் ஏசிக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.16460 அகும். அதேசமயம், தர்ட் எகானமி வகுப்புக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.14160 ஆகும்.

  • 02AC இல் உள்ள பெர்த்களின் மொத்த எண்ணிக்கை = 4
  • 03E இல் உள்ள பெர்த்களின் மொத்த எண்ணிக்கை = 6

அதிகாரப்பூர்வ இணைப்பைச் சரிபார்க்கவும்
இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

இந்த டூர் பேக்கேகில் என்னென்ன வழங்கப்படும்:
>> இந்த பேக்கேகில் நீங்கள் ஷீரடியில் 2 இரவுகள் தங்கலாம்.
>> இந்த பேக்கேகில் 2 மீல்ஸ் வழங்கப்படும்.
>> இது தவிர, செகண்ட் ஏசி மற்றும் தர்ட் எகானமி வகுப்பில் பயணிக்கும் வசதி ரயிலில் கிடைக்கும்.
>> ஏசி வாகனங்களும் பயணிக்க பகிர்வு அடிப்படையில் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:
* மேலே உள்ள விலைகள் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது.
* நிறுவனத்தின் பாலிசியின் படி ரத்து கட்டணம்.
* அனைத்து பயணிகளும் இரட்டை டோஸ் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்தை அடைய வேண்டும்.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் போட போறீங்களா... இந்த விஷயத்தில் சிக்கினால் பேங்க் பேலன்ஸ் காலி ஆகிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News