ஸ்பெக்ட்ராம் ஏலம் 2024 : 96,238 கோடி ரூபாய் இருப்பு விலையில் 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம் விடுகிறது. இந்த ஏலத்தில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஏலம் எடுக்கின்றன. இந்த ஆண்டு மொபைல் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் ஐந்து சுற்றுகளில் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது
முதல் நாளில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நடைபெற்ற ஐந்து சுற்று ஏலத்திற்கு பிறகு, இன்று (2024 ஜூன் 26 புதன்கிழமை) ஆறாவது சுற்று ஏலம் நடைபெறவுள்ளது.
ஏலத்தில் பங்கேற்பாளர்கள்
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் அதிவேக 5ஜி சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் வாங்க முயற்சித்து வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான அதிகபட்ச முன்பணமான 3,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. இதன் அடிப்படையில் நிறுவனம் அதிகபட்ச அலைகளை ஏலம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் ரூ.1,050 கோடியும், வோடபோன் ஐடியா (VIL) ரூ.300 கோடியும் டெபாசிட் செய்துள்ளன.
மேலும் படிக்க | கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!
900 மற்றும் 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் ஏலம் விடப்பட்டுள்ளது என, முதல் நாள் ஏலம் குறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளது. இது தவிர, மூன்று வட்டங்களில் 2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கும் ஏலம் எடுக்கப்பட்டது.
முதல் நாள் ஏலத்தில் 1,800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.6,304.4 கோடிக்கும், 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.4,465 கோடிக்கும், 2,100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.360 கோடிக்கும் ஏலம் பெற்றதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் வைக்கப்பட்ட மற்ற ஐந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள், முதல் நாளில் ஏலம் எடுக்கப்படவில்லை.
எந்த நிறுவனம் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தது என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. டெலிகாம் நிறுவனங்களின் ஏலத்தொகைகள் எவ்வளவு என்பது, ஏல நடவடிக்கைகள் முடிந்த பிறகே தெரியவரும்.
மேலும் படிக்க | Budget 2024: வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் மாற்றமா?
இந்த ஏலத்தில் அதிக உற்சாகம் இல்லை என்று கூறப்படுகிறது. இதை சந்தை வல்லுநர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். ஸ்பெக்ட்ரம் புதுப்பித்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடியோ அலைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவதாக தெரிகிறது
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவில் ஏலம் எடுத்தது. 2010ல் ஆன்லைன் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனை துவங்கியதில் இருந்து இது 10வது ஏலம் ஆகும். கடைசியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகஸ்ட் 2022 இல் நடைபெற்றது, இதில் முதல் முறையாக 5G சேவைகளுக்கு ரேடியோ அலைகள் வழங்கப்பட்டன.
இந்த 5G ஏலம் நாடு முழுவதும் 5G சேவைகளின் விரைவான வெளியீட்டை துரிதப்படுத்தும், இது கவரேஜ் மற்றும் இணைப்பை மேம்படுத்தும். இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தில் (COAI) ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ