புதுடெல்லி: நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்து வருவது அரசின் கவலையை அதிகரித்துள்ளது. கோதுமை, அரிசியை அடுத்து, தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கும் புதிய பருவத்தில் சர்க்கரை ஆலைகளின் ஏற்றுமதியை தடை செய்வது குறித்து முடிவெடுக்கலாம். இது நடந்தால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் நிலை உருவாகும்.
இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததால், கரும்பு உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது தொடர்பாக, செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையும், 2024ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும் கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்கலாம் என்ற ராய்ட்டர்ஸின் செய்தியில், அரசாங்கத்தின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், உபரி சர்க்கரையிலிருந்து எத்தனால் தயாரிப்பதும் அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் சீசனுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டுக்கு போதுமான சர்க்கரை அரசிடம் இல்லை.
மேலும் படிக்க | ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே... அமெரிக்க கடைகளில் தொங்கும் அறிவிப்புகள்!
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 6.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மட்டுமே இந்தியா அனுமதி அளித்துள்ளது, கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா முடிவு செய்தால், உலகளவில் சர்க்கரையின் விலை கடுமையாக உயரும்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சர்க்கரை விலை கடுமையாக உயரலாம் என்று கூறப்படுகிறது. சர்க்கரை உற்பத்தி குறைவின் பெரிய எதிரொலியாக, உலகளவில் உணவுப் பணவீக்கம் அதிகரிக்கும்.
இந்தியாவில் கரும்புப் பயிரை அதிகமாக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை எதிர்பார்த்ததில் பாதி தான் இருந்தது. 50 சதவீதம் மழைப்பொழிவு குறைவு என்பது, நாட்டின் கச்சா சர்க்கரை உற்பத்தியில் 50 சதவீதம் பங்களிக்கும் இரண்டு மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழை இல்லாததால், இந்த பருவத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும் நிலையில் அடுத்த பருவத்திலும் கரும்பு சாகுபடி பாதிக்கப்படும். 2023-24 பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 31.7 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடையால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டதை குறிப்பிட்டுச் சொல்லலாம். கடந்த 20.07.2023, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு உடனடியாக தடை செய்தது. பருவமழை தாமதமாகத் தொடங்கியதால், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்தது.
உலக அளவில் 300 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி தான் முக்கிய உணவாகும். 90% அரிசி உற்பத்தி ஆசியாவில் தான் நடக்கிறது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40% இந்தியா பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா... அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் குவிந்த இந்தியர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ