மார்ச் 31க்குள் இதை செய்யாவிட்டால்... எச்சரிக்கும் வருமான வரித்துறை!

ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2022, 09:05 AM IST
  • ஆதாருடன் பான் இணைப்பது கட்டாயம்.
  • மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிப்பு.
  • எச்சரிக்கை விடுக்கும் வருமானவரித்துறை.
மார்ச் 31க்குள் இதை செய்யாவிட்டால்... எச்சரிக்கும் வருமான வரித்துறை! title=

இந்திய குடிமகன்களின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டுடன் நமது பிற முக்கியமான ஆவணங்களை இணைக்க அரசு கூறி வருகிறது.  வங்கி கணக்கு, மொபைல் நம்பர், மின் இணைப்பு என பல செயல்முறைக்கு ஆதார் இணைப்பு அவசியமாகியுள்ளது.  அந்த வகையில் மக்களை பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வருமான வரித்துறை நீண்ட நாட்களாகவே அறிவுறுத்தி வருகிறது. தற்போது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுவரை பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் மார்ச் 31, 2023-க்குள் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

வருமான வரித்துறையானது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.  அந்த ட்வீட்டில், வருமான வரிச் சட்டம் 1961-ன் படி விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் மார்ச் 31, 2023-க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  பொதுவாக பான் கார்டு என்பது அரசாங்கம் நாட்டில் உள்ள மக்களின் நிதி பரிவர்த்தனைகளை பதிவு செய்ய பயன்படுத்துகிறது.  வருமான வரித்துறையால் வழங்கப்படும் இந்த அட்டை மின்னணு அமைப்பு மூலம் செயல்படுகிறது.  ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.  இப்போது ஆதாருடன் பான் கார்டை எப்படி இணைக்கலாம் என்று பார்க்கலாம்.  

1) பான் கார்டை ஆதாருடன் இணைக்க முதலில் வருமான வரி இ-ஃபைலிங் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2) அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

3) இப்போது ஆதார் அட்டையிலுள்ள பெயரை அதில் நிரப்ப வேண்டும்.

4) பிறகு, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.

5) அதன் பிறகு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். 

6) இப்போது “ஆதாரை இணைக்கவும்” என தோன்றும் ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.  இதன் பிறகு பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக முடிவடையும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News