உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்

Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2024, 12:35 PM IST
உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள் title=

Loan Transfer Charges: வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க, உங்கள் வங்கி கடனை எங்கள் வங்கிக்கு மாற்றிக்கொள்ளுங்கள், அதன்மூலம் பல நன்மைகளை பெறலாம் எனக்கூறி பெரும்பாலான வங்கிகள் மற்ற வங்கிகளில் இருந்து கடனை மாற்ற வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. கடன் வழங்குதல் விதிமுறைகளின்படி, நீங்கள் எந்த வகையான கடனையும், அது வீட்டுக் கடனாகவோ அல்லது தனிநபர் கடனாகவோ இருந்தாலும் சரி, ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். 

பொதுவாக கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், வேறொரு வங்கியிடமிருந்து சிறந்த சலுகையைப் பெறும்போது, தங்கள் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இதன்மூலம் அவருக்கு குறைந்த வட்டிசலுகை கிடைக்கலாம் அல்லது வேற சில சலுகைகள் கிடைக்கலாம். எனவே, கடன் வாங்கிய வாடிக்கையாளரின் முதன்மை நோக்கம், இந்த கடன் பரிமாற்றத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒட்டுமொத்த கடனின் சுமையைக் குறைப்பதாகும்.

கடன் பரிமாற்றம் எவ்வாறு செயல்படுகிறது?

உங்கள் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, புதிய வங்கி ஏற்கனவே உள்ள கடனை செலுத்தும். மேலும் தற்போதைய வங்கியில் நீங்கள் வாங்கிய கடனை முன்கூட்டியே செலுத்தும் போது, அதற்கான கட்டணங்களை நீங்கள் தான் ஏற்க வேண்டும். மறுபுறம் புதிய வங்கிக்கு கடனை மாற்றும் போது கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு வங்கியில் உள்ள உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது, அதற்கு குறைந்த வட்டி விகிதம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் அந்த பணத்தை சேமிக்க முடியும்.

குறைந்த வட்டி வாங்கும் வங்கிக்கு உங்கள் கடனை மாற்றலாம்

உங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தை வேறொரு வங்கி வழங்கும் வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டு, நீங்கள் தற்போது அதிக வட்டி விகிதத்தை செலுத்துகிறீர்கள் எனத் தெரிந்தால், சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கும் வங்கிக்கு உங்கள் கடனை மாற்றிக்கொள்ளலாம். 

மேலும் படிக்க - வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... டாப் 10 வங்கிகள் இவை தான்!

உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கலாம்

உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது, உங்கள் பணத்தை சேமிக்க முடியும் என்றாலும், இந்த கடன் பரிமாற்றத்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

கடன் பரிமாற்றம் கோரிக்கைக்காக நீங்கள் நிதி நிறுவனத்தை அணுகும்போது, வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையின்படி, கடன் கொடுக்கும் வங்கி, உங்களுக்குக் கடன் கொடுக்க முடியுமா? இல்லையா? என்பதை மதிப்பிடுவார். இது Hard Inquiry என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் Inquiry செய்யும் போது, உங்கள் கிரெடிட் ஸ்கோர் சில புள்ளிகளால் குறையலாம். Hard Inquiry என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுவது என்பது ஏற்கனவே உள்ள கடனை அடைப்பதற்காக ஒரு புதிய கடனை எடுப்பதாகக் கருதப்படும். இதன்மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். 

உங்கள் கிரெடிட்  ஸ்கோரை இப்படியும் மேம்படுத்தலாம்

ஆனால் புதிய கடனைப் பொறுப்புடன் நிர்வகிப்பது உங்கள் கடனுக்கான வருமான விகிதத்தைக் குறைத்து, நிலையான, சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் காலப்போக்கில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்.

உங்கள் கடனை அடிக்கடி வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டாம்

இதுமட்டுமில்லாமல் கடன் பரிமாற்றம் செய்யும் போது எக்ஸ்ட்ரா கட்டணம அல்லது மறைக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கலாம். எனவே, உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுவது என்பதை முடிவெடுப்பதற்கு முன், கிரெடிட் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது முக்கியம்.

வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட பெரும்பாலான கடன்களை நீங்கள் வேறொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். உங்கள் கடனை அடிக்கடி மாற்ற வேண்டாம். ஏனெனில் செயல்முறை கட்டனாம் வசூலிக்கப்படுவதால் செலவுகள் அதிகமாகும். 

மேலும் படிக்க - வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News