ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய சில வழிகள்!

இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ.50  செலுத்தியும், மீதமுள்ள இரண்டாம் வகுப்பிற்கு ரூ.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.   

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 06:18 AM IST
  • ரயில்வே துறை வழங்கும் வசதிகள் பற்றி பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை.
  • சிலர் ரயில் டிக்கெட்களை மறந்து அல்லது தொலைத்து விடுகின்றனர்.
  • சில வழிகள் மூலம் ரயில் டிக்கெட்களை மீண்டும் பெற்று கொள்ளலாம்.
ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய சில வழிகள்! title=

இந்திய ரயில்வே தனது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகிறது, ரயில்வே துறை வழங்கும் அனைத்து விதமான வசதிகள் பற்றியும் பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை.  தற்போது பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான வசதியை பற்றி இங்கு பார்க்கலாம், அந்த முக்கியமான வசதி என்னவென்றால் ரயில் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை தொலைந்துவிட்டால் ரயிலில் எப்படி பயணம் செய்யலாம் என்பது பற்றி தான்.  ரயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது பயணத்திற்கு முன்னரோ சிலர் கவனக்குறைவாக தங்களது டிக்கெட்டுகளை தவறவிட நேரிடுகிறது, அப்படி டிக்கெட்டுகளை தொலைந்துவிட்டால் ரயிலில் பயணம் செய்யமுடியாது என்கிற பயம் பலருக்கும் தோன்றுகிறது, ஆனால் இனி அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.

மேலும் படிக்க | Mutual Fund:மியூசுவல் ஃபண்டுகளை எப்போது ரிடீம் செய்ய வேண்டும்? எப்படி செய்வது

ஆம், இனிமேல் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் பயப்பட வேண்டாம், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து உங்களை மீட்டெடுக்கவே ரயில்வே துறை முக்கியமான வசதிகளை வழங்குகிறது.  உங்களுடைய உண்மையான ரயில் டிக்கெட் தொலைந்துபோய்விட்டால் நீங்கள் டூப்ளிகேட் ரயில் டிக்கெட் பெற்று ரயிலில் பயணம் செய்யலாம், ஆனால் இதனை பெற நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ தளமான indianrail.gov.in-ன் படி, ரிசர்வேஷன் சார்ட்டை தயார் செய்வதற்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட/ஆர்ஏசி டிக்கெட் காணவில்லை எனப் புகாரளிக்க வேண்டும்,  அதன்பின்னர் நீங்கள் கட்டணம் செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ.50  செலுத்தியும், மீதமுள்ள இரண்டாம் வகுப்பிற்கு ரூ.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 

டூப்ளிகேட் டிக்கெட்டை பெறுவதற்கு முன்னர் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை :

1) ரிசர்வேஷன் சார்ட்டை தயார் செய்வதற்கு முன்னர் நீங்கள் விண்ணப்பித்தால், இழந்த டிக்கெட்டுக்கும் அதே கட்டணங்கள் பொருந்தும்.

2) வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு டூப்ளிகேட் டிக்கெட்டுகள் வழங்கப்படாது.

3) விவரங்களின் அடிப்படையில் டிக்கெட்டின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டால், சிதைக்கப்பட்ட/முடக்கப்பட்ட டிக்கெட்டுகளிலும் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

4) ஆர்ஏசி டிக்கெட்டுகளில் ரிசர்வேஷன் சார்ட்டை தயாரித்த பிறகு டூப்ளிகேட் டிக்கெட் எதுவும் வழங்கப்படாது.

5) டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்பட்ட பிறகு உண்மையான டிக்கெட்டையும் பெற்று, இரண்டு டிக்கெட்டுகளையும் ரயில் புறப்படுவதற்கு முன் ரயில்வேயிடம் காட்டினால், டூப்ளிகேட் டிக்கெட்டுக்கான கட்டணம் 5% திரும்ப வழங்கப்படும்.

மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

 

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News