SSY: குறைந்த முதலீட்டில் ரூ.70 லட்சம் வருமானம்... அசத்தலான சேமிப்பு திட்டம்

SSY: தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணும் ரிஸ்க் எடுக்க்க விரும்பாத பழமைவாத முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத் திட்டங்கள் உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2023, 02:59 PM IST
  • ஒரு நிதியாண்டில் முதலீடு ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை இருக்கலாம்.
  • ஒரு மாதம் அல்லது வருடத்தில் ஒரு முறை அல்லது பல தவணைகள் மூலம் முதலீடு செய்யலாம்.
  • இந்தத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதியுடையவை.
SSY: குறைந்த முதலீட்டில் ரூ.70 லட்சம் வருமானம்... அசத்தலான சேமிப்பு திட்டம் title=

Sukanya Samriddhi Yojana (SSY): நம் நாட்டு மக்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்கவும், இந்திய அரசாங்கம் பல வித சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தை அளிக்கும் நேரத்தில், சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற நீண்ட கால உறுதியான நிலையான வருமான முதலீட்டு திட்டத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். இதற்கான விடையை இந்த பதிவில் காணலாம். 

தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணும் ரிஸ்க் எடுக்க்க விரும்பாத பழமைவாத முதலீட்டாளர்களுக்கும், சந்தையின் ஏற்ற தாழ்வுகளின் போது பொறுமையை இழந்து மன அழுத்தத்தை எதிர்கொள்ள விரும்பாதவர்களுக்கும், நிலையான வருமானத் திட்டங்கள் உதவும். 

இது முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை அவ்வப்போது கண்காணிக்கவும், முதலீடுகள் மோசமாக செயல்பட்டால், அவற்றில் மாற்றங்களை செய்யவும் உதவுகிறது. 

தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், பலர் அதை ஒரு உறுதியான வருவாய் விருப்பமாகத் தேர்வு செய்கிறார்கள்.

"சுகன்யா சம்ரித்தி என்பது அரசாங்கத் திட்டமாகும். இதன் மூலம் உறுதியான வருமானம் மற்றும் மூலதனப் பாதுகாப்பைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு EEE விலக்கு நிலை உள்ளது. ஆகையால் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 100% வரி கிடையாது. EEE ஆக இருக்கும் மற்றொரு முதலீட்டு திட்டமான PPF ஐ விட இந்த திட்டம் நல்ல வருமானத்தை அளிக்கின்றது. இது கல்வி மற்றும் திருமணம் போன்ற நீண்ட கால தேவைகளை இலக்காகக் கொண்ட முதலீட்டு கருவியாகும். ஆகையால் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழி," என்கிறார் BankBazaar.com. ஏவிபி ஏ.ஆர். ஹேமந்த். 

Sukanya Samriddhi Yojana: 

- ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் நோக்கம் ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் செய்யப்படும் முதலீட்டின் மூலம் அந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்குவதாகும். 

- 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அதிகபட்சம் 21 வயது வரை, அதிகபட்சம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

- 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர் பெறும் முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்காகப் பயன்படுத்தப்படலாம். 

சுகன்யா சம்ரித்தி யோஜனா: குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடுகள்

- ஒரு நிதியாண்டில் முதலீடு ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை இருக்கலாம்.

- ஒரு மாதம் அல்லது வருடத்தில் ஒரு முறை அல்லது பல தவணைகள் மூலம் முதலீடு செய்யலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா: வட்டி விகிதம்

- இது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு நிலையான சதவீத திட்டமாக இருப்பதால், தற்போதைய நிலையான வட்டி விகிதம் 8.0 சதவீதமாக உள்ளது.

- இருப்பினும், அரசாங்க கொள்கைகளின்படி இந்த விகிதத்தை அரசு அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். இருப்பினும், திட்டத்தின் கீழ் ஒருவர் தங்கள் முதலீட்டிற்கு ஆண்டுதோறும் கூட்டு வட்டியைப் பெறுகிறார்.

மேலும் படிக்க | ரூ. 50,100,200,500 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

செல்வமகள் சேமிப்பு திட்டம்: வரி தள்ளுபடி

- இந்தத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதியுடையவை.

- அதேபோல், முதலீட்டின் மீதான வட்டிக்கும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா: தொகையை எடுக்கும் வழிமுறைகள் 

- பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னரே திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

- முந்தைய நிதியாண்டின் இறுதியில் இருக்கும் நிலுவைத் தொகையில் 50 சதவீதம் வரை திரும்ப எடுக்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா: 70 லட்ச ரூபாய் நிதியை உருவாக்குவது எப்படி? 

- சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம் என்பதால், அந்த ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.22.50 லட்சம் முதலீடு செய்யலாம்.

- ரூ. 1.50 லட்சம் வருடாந்திர முதலீடு என்பது உங்கள் மாதாந்திர பங்களிப்பு தோராயமாக ரூ. 12,500 அல்லது ஒரு நாளைக்கு ரூ. 410.95 க்கு சமமாக இருக்கும்.

- 15 ஆண்டுகளுக்கான அந்த முதலீடு உங்களுக்கு ரூ.47.3 லட்சம் வட்டி வருமானத்தையும், முதிர்வுத் தொகையாக ரூ.69.80 லட்சத்தையும் தரும்.

- சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் மொத்தமாக ரூ.22.50 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் வருமானம் கிடைக்கும்.

ஆனால் இங்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கான பணவீக்கத்தை நாம் கணக்கில் எடுக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், முதிர்வுத் தொகை அவ்வளவு லாபகரமாக இருக்காது. இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தை விட கல்வி பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், பணவீக்க இடைவெளியை ஈடுசெய்ய நல்ல தொகை தேவைப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், நிலையான விகித முதலீட்டு திட்டங்கள் மன அமைதியை அளித்தாலும், அதிக தொகையை பெற அதிக வருமானத்தை வழங்கும் முதலீட்டு திட்டங்களும் தேவைப்படுகின்றன. ஆகையால், முதலீட்டாளர் தன் பணத்தை இரண்டிலும் கலந்து முதலீடு செய்வது ஒரு நல்ல முடிவாக இருக்கும். 

மேலும் படிக்க | EPFO அட்டகாசமான அப்டேட்: 75 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News