National Pension Scheme: பணி ஓய்வுகாலம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலத்தில் நம்மை முதுமை ஆட்கொள்வதால், நம்மால் இளமை காலங்களில் இருப்பது போல மன மற்றும் உடல் திடத்துடன் இருக்க முடியாது. ஆகையால், ஒய்வுகாலத்திற்கான திட்டங்களை வகுத்து அதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்ய வேண்டியது அனைவரது கடமையுமாக உள்ளது. போதுமான அளவு சேமிக்கவில்லை என்றால், ஓய்வு காலத்தில் தினசரி அல்லது பிற செலவுகளைக் கையாள்வது சவாலாக இருக்கலாம். இருப்பினும், பயனுள்ள ஓய்வூதிய திட்டமிடல் கணிசமான ஓய்வூதிய கார்பஸை உருவாக்க உங்களுக்கு உதவும். இதற்கு நீங்கள் ஓய்வூதிய திட்டங்கள் உட்பட பல்வேறு விருப்பங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
ஓய்வூதிய பலன்களுக்கான மிகவும் பிரபலமான அரசாங்க ஆதரவு ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS). இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இது ஓய்வூதிய வசதியைத் தவிர வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்றால் என்ன?
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது அனைத்து இந்திய குடிமக்களும் சேரக்கூடிய தன்னார்வ சேமிப்பு திட்டமாகும் (Voluntary Savings Scheme). 2004 -இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இருப்பினும், இது பின்னர் 18 முதல் 70 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. NPS முதலீடுகள் தற்போது 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான வருடாந்திர வருமானத்தை வழங்குகின்றன. கூடுதலாக, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 80 சிசிடி(1) மற்றும் 80 சிசிடி 1(பி) ஆகியவற்றின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம்.
NPS முதலீடுகள் மூலம் ரூ.50,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது எப்படி?
நீங்கள் NPS முதலீடுகள் மூலம் ரூ. 50,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் (Pension) பெற விரும்பினால், அதை எப்படி செய்வது என்பதை இங்கே விரிவாக புரிந்துகொள்ளலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் 40 வயதில் அவரது NPS கணக்கில் பங்களிக்க ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 60 வயதில் ஓய்வு பெற்றால், அவரது மொத்த முதலீட்டு காலம் 20 வருடங்களாக இருக்கும். ஓய்வூதியத்திற்குப் பிறகு ரூ.50,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற, அவர் 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.33,000 முதலீடு செய்ய வேண்டும்.
இதன் மொத்த முதலீடு ரூ.79.2 லட்சமாக இருக்கும். மேலும், ஆண்டு வருமானம் 10 சதவீதமாக இருந்தால், உங்களின் மொத்த ஆதாயங்கள் ரூ. 1.73 கோடியாக இருக்கும். மேலும் உங்கள் மொத்த கார்பஸ் ஃபண்ட் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2.52 கோடியை எட்டும்.
அவரது என்பிஎஸ் முதலீடுகள் முதிர்ச்சியடைந்தவுடன், ஓய்வூதிய நிதியில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுத்தால், அது ரூ.1.51 கோடியாக இருக்கும். மீதமுள்ள 40 சதவீத ஓய்வூதியத் தொகையான ரூ.1.01 கோடியை வருடாந்திர விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். 6 சதவீத வருடாந்திர விகிதத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவர் ஓய்வு பெறும் ஆண்டுகளில் மாதம் ரூ.50,536 லட்சம் ஓய்வூதியத்தைப் பெறுவார்.
இருப்பினும், ஒருவர் சிறு வயதிலேயே NPS திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், சிறிய பங்களிப்புகள் மூலம் இதே போன்ற அல்லது அதிக கார்பஸை உருவாக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ