SIP Investment: மனிதர்களாகிய நாம் அனைவரும் நம் குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டுள்ளோம். அவர்களது வழ்க்கை பாதுகாப்பாக, அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். சிலருக்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையும், பதற்றமும் இருப்பதுண்டு. உங்களுக்கும் அப்படிப்பட்ட பதற்றம் இருந்தால், முதலில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இதனால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு முதல் திருமணம் வரை அனைத்துப் பணிகளையும் எளிதாகக் கையாளும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை குறிக்கோளாகக் கொண்டு, பணத்தைக் குவிக்கும் உத்தியுடன் முதலீடு செய்யுங்கள். உங்கள் குழந்தையை 21 வயதில் கோடீஸ்வரராக்க ஆசையா? இதை எளிதாக செய்யலாம். அதற்கான உத்தியை இங்கே காணலாம். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
SIP Calculator: இந்த ஃபார்முலா மூலம் முதலீடு செய்யுங்கள்
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, நீங்கள் 21x10x12 என்ற SIP சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். இந்த சூத்திரத்தின்படி, உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் SIP ஐ தொடங்க வேண்டும். SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
21x10x12 ஃபார்முலாவில்,
- 21 என்பதன் அர்த்தம், இந்த முதலீட்டை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பதாகும்.
- 10 என்பது ரூ.10,000, அதாவது குழந்தையின் பெயரில் மாதா மாதம் ரூ. 10,000 மாதாந்திர SIP -இல் முதலீடு செய்வதாகும்.
- 12 என்பது வருமானம். SIP இன் சராசரி வருமானம் 12 சதவீதமாகக் கருதப்படுகிறது.
இந்த வகையில், குழந்தைக்கான முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களால் குழந்தைக்கு நிதி திரட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தை பிறந்தவுடனேயே இந்த ஃபார்முலாவைக் கொண்டு முதலீட்டைத் தொடங்கினால், அந்தக் குழந்தை 21 வயதில் கோடீஸ்வரராகலாம்.
மேலும் படிக்க | DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
உங்கள் குழந்தை கோடீஸ்வரராவது எப்படி? அதற்கான கணக்கீடு இதோ:
- இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி, குழந்தை பிறந்தவுடனேயே குழந்தையின் பெயரில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபியைத் தொடங்கி 21 வருடங்கள் தொடர்ந்தால், 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.25,20,000 முதலீடு செய்வீர்கள்.
- SIP இன் சராசரி ரிடர்ண் 12% என கணக்கிடப்பட்டால், 21 ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு வட்டியாக மட்டும் ரூ.88,66,742 கிடைக்கும்.
- இந்த வழியில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.1,13,86,742 கிடைக்கும்.
- இதன் மூலம் 21 வயதில் உங்கள் குழந்தை ரூ.1 கோடிக்கு மேலான தொகைக்கு உரிமையாளராகி விடுவார்.
- இந்தப் பணத்தின் மூலம் அவருடைய எதிர்காலத் தேவைகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும்.
ரூ.50,000 சம்பாதிக்கும் நபர்களும் ரூ.10,000 எஸ்ஐபி -இல் எளிதாக முதலீடு செய்யலாம்:
SIP -க்காக ஒவ்வொரு மாதமும் மாத செலவிலிருந்து ரூ.10,000 எடுப்பது எப்படி என்று பலருக்கு பெரிய கேள்வி இருக்கும். ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி விதி கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உங்கள் வருமானம் ரூ. 50,000 என்றால் அதில் 20 சதவீதம் ரூ.10,000 ஆக இருக்கும். உங்கள் தேவைகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, குழந்தையின் பெயரில் ரூ.10,000 முதலீடு செய்யலாம். எனினும், முதலீட்டாளரின் சம்பளம் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், இது அவருக்கு கடினமாக இருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ