கோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடு

Post Office Saving Scheme: தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2024, 10:49 PM IST
  • PPF மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
  • இந்த கணக்கீடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
  • பணத்தை இழக்கும் அபாயம் இதில் இல்லை.
கோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடு title=

Post Office Saving Scheme: எதிர்காலத்திற்கான தேவைகளுக்காக பணத்தை சேமிக்கும் அனைவரும் பல வித முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். சிலர் குறுகிய கால திட்டங்களிலிலும் சிலர் நீண்ட கால திட்டங்களிலும் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் நீண்ட காலத்திற்கு ஒரு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் அதிகப் பணத்தைச் சேர்க்க விரும்பினால், அதற்கு தபால் நிலைய திட்டங்கள் (Post Office Schemes) பயனுள்ளதாக இருக்கும். 

தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. மேலும் நீங்கள் அதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். PPF இல் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து டெபாசிட் செய்தால், தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் மிக எளிதாக கோடீஸ்வரராக்கலாம். 

PPF மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

தற்போது PPF -க்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர, இந்தத் திட்டத்தின் ஒரு நன்மை என்னவென்றால், இதில் டெபாசிட் செய்யப்படும் பணம், பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்ச்சியில் பெறப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். அதாவது இது EEE பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலீடு செய்தால்,  நீங்கள் எளிதாகக் கோடீஸ்வரராகலாம். தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலீடு செய்ய, 5 ஆண்டுகளுக்கு பிளாக்காக இரண்டு முறையாவது நீட்டிக்க வேண்டும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான அசத்தலான FD விகிதங்கள்: பம்பர் லாபம் காணலாம்

இந்த கணக்கீடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம்

ஒருவர் இதில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்து, தொடர்ந்து 25 ஆண்டுகள் டெபாசிட் செய்தால், 25 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். இதை இந்த கணக்கீட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். PPF கால்குலேட்டரின் படி, 25 ஆண்டுகளில் 37,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். 7.1 சதவீத வட்டி விகிதத்தின்படி, ரூ.65,58,015 வட்டியாகக் கிடைக்கும். இந்த வழியில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் முதலீடு மற்றும் அதில் பெறப்பட்ட வட்டித் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1,03,08,015 கிடைக்கும்.

ஆண்டுக்கு 1.5 லட்சம் எப்படி டெபாசிட் செய்வது என சிலர் யோசிக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது பெரிய விஷயமல்ல. ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தில் 20 சதவீதத்தையாவது சேமித்து முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார விதி கூறுகிறது. ஒருவர் ஒரு மாதத்தில் மாதம் ரூ.65-70 ஆயிரம் சம்பாதித்தாலும் இதை எளிதாக செய்யலாம். 

- ரூ.65,000-ல் 20% என்பது ரூ.13,000 

- ஒரு மாதத்தில் ரூ.12,500 மட்டுமே சேமிக்க வேண்டும். 

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எளிதாக இந்த முறையில் முதலீடு செய்து உங்கள் ஓய்வூதிய வயதிற்குள் ரூ.1 கோடி நிதியைச் சேர்க்கலாம். இது உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய திட்டமாக இருப்பதால், உங்கள் பணத்தை இழக்கும் அபாயம் இதில் இல்லை.

மேலும் படிக்க | Union Bank of India: நிலையான வைப்புக் கணக்குக்கு 8% வரை வட்டி கொடுக்கும் வங்கி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News