PUBG-ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ள கேம் எது தெரியுமா?

பிரபலமான விளையாட்டு PubG Mobile புகழ் குறைந்துவிட்டது. வருவாயைப் பொறுத்தவரை ஹானர் ஆஃப் கிங்ஸை Honor of Kings பப்ஜி மொபைலை முந்தி விட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2021, 08:07 PM IST
  • ஹானர் ஆஃப் கிங்ஸ் அதிகம் சம்பாதித்துள்ளது.
  • 267.3 மில்லியன் வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
  • ஜனவரி மாதம் ஹானர் ஆப் கிங்க்ஸ் PUBG ஐ தோற்கடித்துவிட்டது.
PUBG-ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ள கேம் எது தெரியுமா? title=

புதுடில்லி: Honor of Kings விளையாட்டு ஜனவரி 2021-ல் உலகளவில் அதிக வசூல் செய்த விளையாட்டாக மாறியுள்ளது. புதிய ஆண்டின் முதல் மாதம் வரை அதன் மொத்த வருவாய் 267.3 மில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இந்த Tencent கேம் சீனாவிலிருந்து 97% வருவாயை ஈட்டின. அதே நேரத்தில்,  தாய்லாந்திலிருந்து 1% வருவாயைப் பெற்றது. ஜனவரி 2020 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரி 2021 இல் ஹானர் ஆஃப் கிங்ஸ் விளையாட்டு மூலம் கிடைத்த வருமானம் 22% அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது.

பிரபலமான விளையாட்டு PubG Mobile புகழ் குறைந்துவிட்டது. வருவாயைப் பொறுத்தவரை ஹானர் ஆஃப் கிங்ஸை Honor of Kings பப்ஜி மொபைலை முந்தி விட்டது. பப்ஜி விளையாட்டு வருவாய் மதிப்பீட்டின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. இருப்பினும், பப்ஜி மொபைல்  ஒரு நல்ல தொகையை ஈட்டியுள்ளது. அதன் வருவாயில் சுமார் 60% சீனாவிலிருந்து வந்துள்ளது. அதே நேரத்தில், அதன் உள்ளூர் பதிப்பான கேம் ஃபார் பீஸின் வருவாய் அமெரிக்காவிலிருந்து 9.8% வருமானத்தை ஈட்டியுள்ளது

ஸ்டோர் இண்டெலிஜன்ஸ்  தளத்திலிருந்து தரவு வெளியிடப்பட்டது
விளையாட்டின் மத்திபீட்டௌ சென்சார் டவரின் ஸ்டோர் இண்டெலிஜன்ஸ்தளத்தால் வெளியிடப்பட்டது. சென்சார் டவரில் பதிவான இதன் மொத்த மதிப்பீடு 2020 ஜனவரி 1 முதல் அடுத்த ஜனவரி 2021 வரை ஆகும். இந்தத் தரவு உலகெங்கிலும் உள்ள ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளேயிலிருந்து சேகரிக்கப்பட்டது. மொத்த பயனர் பற்றிய சரியான தகவல்கள் இங்கிருந்து கிடைக்கின்றன. இருப்பினும், மூன்றாம் தரப்பு ஆண்ட்ராய்டு கடைகளின் தரவரிசை இந்த தரவரிசையில் சேர்க்கப்படவில்லை.

Honor of Kings வரலாறு
ஹானர் ஆஃப் கிங்ஸ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு மல்டிபிளேயர் ஆன்லைன் போர் அரங்காகும். இது டிமி ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது மற்றும் டென்சென்ட் கேம்ஸ் வெளியிட்டது. சீனாவில், இந்த விளையாட்டு iOS மற்றும் Android மொபைல் தளங்களில் கிடைக்கிறது. இது திடீரென்று சீன விளையாட்டு பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஹானர் ஆஃப் கிங்ஸ் தினசரி 80 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் ப்ளேயகளையும் 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர ஆக்டிவ் ப்ளேயர்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த விளையாட்டில் தினசரி 100 மில்லியனுக்கும் அதிகமான அக்டிவ் ப்ளேயர்கள் இருந்தனர்.

ALSO READ | செவ்வாயில் தரையிறங்கும் ரோவரின் அசத்தல் படங்களை வெளியிட்டுள்ளது NASA..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News