HDFC Bank News: தனியார் துறை முன்னணி வங்கியான HDFC வங்கி (HDFC Bank), தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பிட்ட கால அளவிற்கான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை வங்கி குறைத்துள்ளது. இவை 0.20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
HDFC வங்கி, ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளில் மெச்யூர் ஆகும் வைப்புக்கான விகிதங்களை குறைத்துள்ளது. மீதமுள்ள கால வைப்புத்தொகையின் வட்டி விகிதத்தில் (Interest Rates) எந்த மாற்றமும் இல்லை. ஓராண்டு வைப்புக்கான வட்டி விகிதங்கள் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டு வைப்புகளில், வங்கி வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. புதிய விகிதத்தின்படி, HDFC வங்கி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 2.50% வட்டி அளிக்கிறது. இந்த விகிதம் 30-90 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளில் 3 சதவீதமாகும்.
91 நாட்கள் முதல் 6 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கான வட்டி 3.5% ஆகும். 9 மாதங்கள் ஒரு நாளுக்குப் பிறகு, ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.4 சதவீத வட்டி கிடைக்கும்.
ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.9 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். ஒரு ஆண்டு ஒரு நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் கால வைப்புக்கான வட்டி விகிதம் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் ஓர் நாள் முதல் 3 ஆண்டுகளில் மெச்யூர் ஆகும் நிலையான வைப்புத்தொகைக்கு 5.15 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும். மூன்று முதல் ஐந்து வருட காலத்திற்கு வட்டி 5.30 சதவீதமாக இருக்கும். 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 5.50 சதவீத வட்டி செலுத்தும்.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
HDFC வங்கியின் புதிய FD விகிதங்கள் (ரூ .2 கோடிக்கு குறைவான தொகை)
கால அளவு | வட்டி விகிதம் |
7-14 நாட்கள் | 2.50% |
15-29 நாட்கள் | 2.50% |
30-45 நாட்கள் | 3% |
46-60 நாட்கள் | 3% |
61-90 நாட்கள் | 3% |
91 நாட்கள்-6 மாதங்கள் | 3.50% |
6 மாதங்கள் 1 நாள் – 9 மாதங்கள் | 4.40% |
9 மாதம் 1 நாள் - 1 ஆண்டுக்கு குறைவு | 4.40% |
1 ஆண்டு | 4.90% |
1 ஆண்டு 1 நாள் – 2 ஆண்டுகள் | 5.00% |
2 ஆண்டுகள் 1 நாள் – 3 ஆண்டுகள் | 5.15% |
2 ஆண்டுகள் 1 நாள் – 3 ஆண்டுகள் | 5.15% |
3 ஆண்டுகள் 1 நாள் – 5 ஆண்டுகள் | 5.30% |
5 ஆண்டுகள் 1 நாள் – 10 ஆண்டுகள் | 5.50% |
மூத்த குடிமக்கள் (Senior Citizens) பொது மக்களை விட அரை சதவீதம் அதிக வட்டி பெறுவார்கள். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FD-க்கு வங்கி 3% முதல் 6.25% வரை வட்டி அளிக்கிறது. HDFC வங்கியின் புதிய FD விகிதங்கள் (ரூ. 2 கோடிக்கு குறைவான தொகை) மூத்த குடிமக்களுக்கான புதிய FD விகிதங்கள் (ரூ .2 கோடிக்கு குறைவான தொகை)
ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR