10 வினாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் HDFC வங்கி! விண்ணப்பிக்க வழிமுறைகள்!

ஹெச்டிஎஃப்சி வங்கி 10 வினாடிகளில் கடன் சேவை வழங்குவது மட்டுமின்றி, வங்கியில் இதற்கு முன்னர் கடன் பெறாமல் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளருக்கு பல சலுகைகளை வழங்கவிருக்கிறது.    

Written by - RK Spark | Last Updated : Sep 10, 2022, 06:32 AM IST
  • ஹெச்டிஎஃப்சி வங்கி பல ஆபர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் கடன்களை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.
  • ஹெச்டிஎஃப்சி வங்கி அடமானத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் கடன்களை வழங்கியுள்ளது.
10 வினாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் HDFC வங்கி! விண்ணப்பிக்க வழிமுறைகள்! title=

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியானது அதன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மற்றும் வங்கியில் கணக்கு வைத்திருக்கத்த நபர்கள் என அனைவருக்கும் வெறும் 10 வினாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தி மற்ற வங்கிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழவிருக்கிறது.  இந்த தனிநபர் கடன் சேவையை இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  10 வினாடிகளில் கடன் சேவை வழங்குவது மட்டுமின்றி, வங்கியில் இதற்கு முன்னர் கடன் பெறாமல் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளருக்கும் பல சலுகைகளை வழங்கவிருக்கிறது.  

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் வரி சலுகை பெற செய்யவேண்டியவை!

தனியார் கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் சுயதொழில் செய்பவர்களில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே கடனை வழங்குகிறது, இதனை அதிகரிக்க ஹெச்டிஎஃப்சி வங்கி முடிவு செய்துள்ளது.  மேலும் வங்கி இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் கடன்களை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.  இந்த தனியார் வங்கி ரூ.1.48 லட்சம் கோடி சில்லறை கடன்களை வழங்கி மிகப்பெரிய பங்கை உருவாக்கியதோடு தற்போது 10 வினாடிகளில் கடன்களை வழங்கி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.  சுயதொழில் செய்யும் வாடிக்கையாளரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வங்கி பல கடன் சலுகைகளை வழங்கப்போவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வங்கி குறித்து வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, ஹெச்டிஎஃப்சி வங்கி அடமானத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் கடன்களை வழங்கியுள்ளது, சுமார் ​​440 மாவட்டங்களில் வங்கிகள் அடமானத்திற்கு கடன் வழங்கியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பெண்களுக்கான வங்கி கிளையையும் ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News