புதுடெல்லி: NPS and Old Pension System: மத்திய அரசு ஊழியர்களின் (Central Government employees) ஓய்வூதியம் குறித்து ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. National Pension System (NPS) தவிர்த்து, 2021 மே 31 வரை அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) இந்த தகவலை அறிவிப்பு மூலம் வழங்கியுள்ளது.
Old Pension Scheme விண்ணப்பம் மே 5 க்குள்
இதைப் பயன்படுத்த விரும்பும் எந்த ஊழியர்களும் மே 5 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. விண்ணப்பிக்காத ஊழியர்கள் தொடர்ந்து தேசிய ஓய்வூதிய (Pension) முறையிலிருந்து பயனடைவார்கள். 1 ஜனவரி 2004 முதல் 28 அக்டோபர் 2009 வரை நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு CCS Pension இன் கீழ் மட்டுமே ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கும்.
ALSO READ | ஓய்வூதியம் பெறுவதில் இனி நோ டென்ஷன், கருணை காட்டியது அரசாங்கம்!
பழைய ஓய்வூதிய திட்டம் அதிக நன்மை பயக்கும்!
இந்த முடிவைப் பற்றிய வல்லுநர்கள் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் NPS ஐ விட அதிக நன்மை பயக்கும், ஏனெனில் பழைய திட்டத்தில் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.
எந்த ஊழியர்களுக்கு திட்டத்தின் பலன் கிடைக்கும்
ரயில்வே ஓய்வூதிய விதிகள் அல்லது CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 இன் கீழ் எந்த மாநில அரசு துறைகள் அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட மத்திய ஊழியர்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதிய திட்டம் பயனளிக்கும். இதன் பின்னர், அவர் மாநில அரசின் ஓய்வூதியத் துறையின் பணியிலிருந்து ராஜினாமா செய்தால், அவருக்கு ஓய்வூதியத் துறை அல்லது மத்திய அரசின் மத்திய தன்னாட்சி அமைப்பில் நியமனம் கிடைத்தது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR